Thiravukol

*** The Key to my thoughts in Tamil ***

Name:
Location: Basel, Switzerland

https://www.instagram.com/mail2subha/

Friday, April 14, 2006

Annual Day.

நான் எல்கேஜி லேந்து ஐந்தாவது வரைக்கும் ஒரே ஸ்கூல் தான். அந்த ஸ்கூலோட பெருமையே அதோட annual day தான். சம்மர் லீவுக்கு முன்னாடி வரும். முதல்ல அந்த வருஷம் நடந்த விளையாட்டு போட்டி, பேச்சு போட்டி அதுக்கெல்லாம் ப்ரைஸ் குடுப்பாங்க. அப்புறம் இந்த ட்ராமா, டான்ஸ் கூத்தெல்லாம் நடக்கும். ஒவ்வொரு க்ளாஸ்லேந்தும் சில பேர செலக்ட் பண்ணி அவங்களுக்கு ப்ராக்டீஸ் குடுப்பாங்க. நான் எப்போதும் எதுலயாவது சேர்ந்துடுவேன். க்ளாஸ் கட் அடிச்சிட்டு ப்ராக்டீஸ் ப்ராக்டீஸ்னு போய்டுவோம். இதுக்குனு ஆள் ஏற்பாடு பண்ணி வச்சுருப்போம். வந்து கூப்ட. எந்த பீரியட்ல டெஸ்ட் இருக்கோ அந்த டைம்க்கு கரெக்டா ஆள் வந்துடும் "ப்ராக்டீஸ்க்கு கூப்டாங்க"ன்னு. ஒரு வெற்றி புன்னகையோட கிளம்பிடுவோம். அதுவும் லாஸ்ட் பீரியட்னா இன்னும் சந்தோஷம். பையையும் தூக்கிட்டு ஜூட் தான்.

தமிழ் நாடகமா, இங்க்லிஷ் நாடகமா? பரத நாட்டியமா, குத்தாட்டம்மா? (இருபது வருஷம் முன்னாடி குத்தாட்டம் அவ்ளோ மோசம் கிடையாது!) எங்க அக்கா மாதிரி சில "ஆல் இன் ஆல் அழகு ராணிங்க" எல்லாம் ரெண்டு, மூனு ஷோ-ல மெயின் ரோல் பண்ணுவாஙக. அவங்க எல்லாம் முக்கியப் பட்டவங்க. நானெல்லாம் மிஞ்சிப் போனா ரெண்டு ஷோ, அதுவும் "உப்புக்கு சப்பாணி" ரோல் தான். இப்ப யோசிச்சா பாவமா இருக்கும். ஆனா அப்பெல்லாம் அதுவே சொர்கம். க்ளாஸ்ல ரெண்டு, மூனு பேர தான் செலக்ட் பண்ணுவாங்க. அதனால அதுவே பெரிய விஷயம். அதுவும் மேக்கப் போட்டுக்கவே ட்ராமா-ல சேருவோம். மெயினா லிப்ஸ்டிக். ராமராஜன் மாதிரி "மனோகரா" ட்ராமா-ல் நடிக்கற சிப்பாய்க்கு கூட லிப்ஸ்டிக் உண்டு.

எனக்கு எப்போதுமே டான்ஸ்-ல இஷ்டம். கண்ணாடி முன்னாடி நின்னு ஆடிகிட்டே இருப்பேன். (ஆறு வயசுல என்னோட கொணஷ்டையெல்லாம் பார்த்து எங்க அம்மா என்னை பரத நாட்டிய க்ளாஸ்ல சேர்த்து விட்டு, நான் ஒரே நாளோட ஓடி வந்தது வேற விஷயம்!) எப்போதும் எதாவது ஒரு க்ரூப் டான்ஸ்-ல தான் நான் இருப்பேன். எட்டு பேர் இருப்பாங்க. நல்லா ஆடற பசங்க இல்லேனா, பொண்ணுங்களுக்கே பசங்க வேஷம் போட்ருவாங்க. ஹைட் படி தான் நிக்க வைப்பாங்க. நான் எப்போதும் ரெண்டாவது இல்ல மூணாவதா நிப்பேன். ரொம்ப நல்லா ஆடினா சென்டர்-ல நிக்க வைப்பாங்க. ஆனா டீச்சரோட அண்ணன் பொண்ணோ, பையனோ க்ரூப் டான்ஸ்ல இருந்தா, நமக்கு சென்டர் சான்ஸ் அதோகதி தான். மூணாவது படிக்கறப்போ அடிச்சுது எனக்கு அதிர்ஷ்டம். டீச்சரோட அண்ணன் பையனுக்கும் எனக்கும் சென்டர்ல் ஆட சான்ஸ். (நல்ல வேளை டீச்சரோட அண்ணனுக்கு பொண்ணு இல்லை!) எனக்கு தலை கால் புரியாத சந்தோஷம்! பார்க்கறவங்க எல்லார் கிட்டயும் சொல்லி பீத்திகிட்டு இருந்தேன். (இப்ப கூட அது தான் பண்ணிகிட்டு இருக்கேன்!)

Annual day அன்னிக்கி மத்யானம் கடைசியா ஒரு வாட்டி ப்ராக்டீஸ் பண்ணிட்டு, மேக்கப் ஆரம்பமாகும். மேக்கப் மேன் எல்லா சாமானோட ஒரு ரூம்ல இருப்பாரு. என்ன ரோல்னு சொன்னா அதுக்கு ஏத்த மாதிரி மேக்கப் நடக்கும். "கண்ண மூடு, அஞ்சு நமிஷம் தறக்காத, தண்ணி குடிக்காத, இல்லேனா லிப்ஸ்டிக் அழிஞ்சுடும்" ன்னு டீச்சர் சவுண்ட் உடுவாங்க. அஞ்சு மணி வாக்குல எங்கம்மா பிஸ்கட், ரஸ்னா வோட வருவாங்க. உதட்ல படாம தூக்கிக் குடிப்பேன். மத்த பொண்ணுங்களுக்கெல்லாம் நான் குடிக்கறது தண்ணி இல்லை, ரஸ்னானு தெரியணுமேன்னு வேற கவலை. "அம்மா அந்த ரஸ்னாவ குடு. ரஸ்னா சில்லுனு இருக்கா? ரஸ்னா போறும்" னு ரஸ்னாக்கு தனி அழுத்தம் வேற. ஷேர் பண்ணிப்போம்னு தோணவே தோணாது. "என்னுடையது எல்லாம் என்னுடையது மட்டுமே. மற்றவருடையது எல்லாம் நான் திருடிக்கொள்வத்ற்கே" ன்னு நினைச்சுக்கிட்டு இருந்த காலம் அது. (ரொம்ப சாரி, பர்ஸானா. உன்னோட சிங்கப்பூர் ஸ்கேல திருடினது நான் தான்!)

ப்ரேயர் சாங், வெல்கம் ஸ்பீச், விஐபி ஸ்பீச், பரத நாட்டியம்(லலிதா மிஸ்ஸோட பொண்ணு!) அப்புறம் ஷோ ஆரம்பமாகும். எல்கேஜி ஸ்டூடண்ட்ஸ்லேந்து ஆரம்பிப்பாங்க. அஞ்சாவது வகுப்பு வரதுக்குள்ள, குட்டீஸ் எல்லாம் தூங்கியே போயிருக்கும். என்னோட ரெண்டு நிமிஷ சிப்பாய் ரோல் முடிஞ்ச உடன, ஓடிப் போய் டான்ஸ்க்கு தயாராவேன். "சங்கே முழங்கு!" நல்ல தமிழ்ப்பற்றுள்ள பாட்டு, கட்டாயம் ஃபர்ஸ்ட் ப்ரைஸ்ன்னு விஜயா மிஸ் சொல்லி இருந்தாங்க. அதுவும் மிஸ்ஸோட அண்ணன் பையன் வேற என்னோட ஜோடி. கண்டிப்பா ப்ரைஸ் உண்டு! நல்லா ஆடினேன்னு நினைக்கறேன். முடிஞ்சப்புறம் ஓடிப் போய் அப்பா-அம்மா மடில உக்காந்து மிச்ச ப்ரோக்ராம் எல்லாம் ரஸ்னா குடிச்சுக்கிடே பார்ப்பேன். எங்க அக்காவோட தனி பரத நாட்டியம் ஆரம்பிக்கும் போது, சத்தமா கை தட்டுவோம். லலிதா மிஸ்ஸோட பொண்ணுக்குதான் எப்போதும் போல ஃபர்ஸ்ட் ப்ரைஸ் குடுப்பாங்க. இருந்தாலும், "வந்தாள் மஹாலக்ஷ்மியே" பாட்டு முடியும் போது, எங்க அக்காக்கு கிடைக்காதான்னு ஒரு நப்பாசை இருக்கும். ஆனா அவ இதுல இல்லேனா, இன்னொன்னுல வாங்கிடுவா. எனக்கு இருக்கற ஒரே சான்ஸ் "சங்கு" தான்! கடைசியா ப்ரைஸ் அனொவுன்ஸ் பண்ணுவாங்க. எங்க அக்காக்கு இரண்டாவது ப்ரைஸ்! (லலிதா மிஸ்ஸோட பொண்ணுக்குதான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ்!) "அண்ணன் பையன்" இருக்க கவலை ஏன்? பர்ஸ்ட் ப்ரைஸ் எங்களுக்கே! ஒரே சந்தோஷம். நன்றி அண்ணன் பையா! (பேர் மறந்து போச்சு.) அப்புறம் தூக்கக் கலக்கத்தோட அப்பா ஸ்கூட்டர்ல வீட்டுக்கு போவோம். டான்சுக்குன்னு கட்டிக்கிட்ட அம்மாவோட பட்டுப் புடவைய மனசே இல்லாம கழட்டுவேன். இப்ப யோசிச்சா, அத போட்ட்டுக்கிட்டே தூங்கி இருக்கலாம்னு தோணுது.

6 Comments:

Anonymous Anonymous said...

Hmmm. English la thaan nalla ezhudhuvannu theriyum, thamizh layum kalakkara.. Brought me back to those days! Now they don't have that stage area I think, they built buildings there too :-(

4:48 PM, April 14, 2006  
Blogger kuttichuvaru said...

ரொம்ப நல்ல பதிவு !! எனக்கும் என்னோட பள்ளி அனுபவங்கள் தோணிடுசு !! ப்ரசன்னா பாவம்!! திரும்ப கொடுத்துடுங்க!!

5:12 PM, April 14, 2006  
Blogger Viji said...

school name sollunga! [sri matha?] :)

6:47 PM, April 17, 2006  
Anonymous Anonymous said...

nIngka enththa paLLikkUtam?

10:24 PM, April 17, 2006  
Anonymous Anonymous said...

aamaam, unga "alma mater" ennanu therinjukkanum

sollunga please...

6:46 PM, April 19, 2006  
Blogger பாரதிய நவீன இளவரசன் said...

கல்லூரிக்காலத்தைவிட பள்ளிப்பருவ நினைவுகள் இனிமையானவையாகவே எனக்கும் தோன்றும்.

யார் வாசித்தாலும் அவரவர் பால்ய கால ஞாபகங்கள் டக்கென்று வரத்தான் செய்யும்.

இன்னும் நிறைய எழுதுங்கள்.

7:30 PM, April 22, 2006  

Post a Comment

<< Home

free invisible hit counter