Another Blog. (God! I must be really jobless!)
தமிழ் பதிவு ஆரம்பிச்சாச்சு! தமிழ் புத்தாண்டுக்கு ஒரு ப்ளாக்கர் இதை விட பெரிசா என்னத்த செய்ய முடியும்? ப்ரகாஷ்க்கும், ப்ரேமலதாக்கும் மிக்க நன்றி. அவங்க தான் இதுக்கு காரணம். கொஞ்ம் க்ரெடிட் பிரபுக்கும் கொடுக்கணும். என்னை பீட்டர் பார்ட்டின்னு சொன்னவராச்சே! பதிவெல்லாம் போடறதுக்கு முன்னாடி இதை சொல்லிடறேன். "பிழைகள் இருந்தால்(கண்டிப்பா இருக்கும்!) பொருத்தருள்வீர்களாக"! இந்த க், ச் இதெல்லாம் வேண்டாத இடத்துல இருந்தாலோ, வேண்டிய இடத்துல இல்லைனாலோ கண்டுக்காதீங்க. அதெல்லாம் தமிழம்மா சொல்லிக் குடுக்கும் போது நான ட்ராமா ப்ராக்டீஸ்க்கு (கீழே இருக்கும் பதிவை பார்க்கவும்!) போயிட்டேன்! மத்தபடி வேற பிழைகள் எதாவது இருந்தால், அது டைபோஸ்!( இப்ப தான் தமிழ்ல டைப் பண்ண ஆரம்பிச்சு இருக்கேன். அநியாயத்துக்கு பொறுமை வேண்டிருக்கு.)
தலைப்பு இங்கிலிஷ்ல இருக்கேன்னு, "தமிழ் பதிவுக்கு எதுக்கு இங்கிலிஷ் டைட்டில்?" ன்னு போராட்டம் எல்லாம் பண்ணாதீங்க. "யாதும் டைட்டிலே, யாவரும் கேளிர்!" (முதல்ல கேளிர் ஆ, கேளீர் ஆன்னு சொல்லுங்க. அது கூட தெரியாம என் டைட்டில பத்தி என்ன பேச்சு வேண்டியிருக்கு?) தமிழ்ல ப்ளாக் பண்ணுவேன்னு முன்னாடியே தெரிஞ்சுருந்தா, வேற நிக்நேம் தேர்ந்தெடுத்துருப்பேன். பரவாயில்லை. "பூ" ன்னே வச்சுக்கலாம், அதுவும் அழகாதான் இருக்கு! ("ப்பூ"ன்னு ஆகாம இருந்தா சரி!)
வருகை தந்த அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வராதவர்களுக்கு, Happy Tamil New Years Day!
10 Comments:
Iniya Thamizh Puthaandu Vaazhthukkal!!
தாய்க்குலமே... வருக வருக..
தமிழ் வலைப்பதிவு உலகத்துக்கு நல்வரவு
மிதிவண்டி இடைவெளியில்(Cycle Gap la) என்னை எதுக்கு வம்புக்கிழுக்கறீங்க?
தமிழ் புத்தாண்டுல முதல் வேலை இதுதான், அதாவது உங்களுக்கு பின்னுட்டம் இடுவது (இனிமே இந்தமாதிரி வார்த்தைகள்லாம் கத்துக்கணும். அப்பத்தான் இவய்ங்க கிட்ட குப்ப கொட்ட முடியும்). சரி, சரி, என் புரணம் போதும்,
வருக, வருக.
என்னோட ப்ளாக்குக்கு இப்போதான் ஒரு ஸ்ட்ரெங்த்தே கிடைச்சிருக்கு. (அப்பா, இனிமே வாசகர்களும் இருப்பாங்க). கூட்டாளியே, வருக, வருக.. (எலெக்ஸன் டைம். அப்படியே, தமிழ் ஸ்டைல்ல ஒரு வெல்கம் போட்டேன்).
கலக்குங்க....புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
வாங்க, வாங்க!!
..aadhi
அட! தமிழ் வலைப்பதிவா! நடக்கட்டும்-நடக்கட்டும்!
வருகை தந்த அனைவருக்கும் முதற்கன் என் நன்றி! கடைசியாவும் நன்றி! :)
தமிழ்லயும் கலக்குறீங்க! பலே, பலே! :)
Booooo,
Can you let me know how do you type in tamil. I tried all the possible ways... it was booooo.. so let me if you've time and I'll give sneak preview of my poems, if you could help me.
Thanks
anukavi.
Post a Comment
<< Home