Ayush Homam.
ஆஷுக்கு ஒரு வயசாக போவுதுனு நினைச்சா நம்பவே முடியலை. போன வாரம் அவளோட ஆயுஷ் ஹோமம் நல்லபடியா நடந்து முடிஞ்சுது. காதும் குத்தியாச்சு. என்னமோ குழந்தை மாறி போன மாதிரி தோணுது.. முகமும் மாறியிருக்கு.. குணமும் மாறியிருக்கு. அதெப்படி ஒரே நாள்ல ஒரு குழந்தை மாறும்னு தெரியலை. காது குத்தினதோட effectஓ என்னமோ? அடுத்த மாசம் மொட்டை வேற அடிக்கணும். பாவம் குழந்தை. போட்டு படுத்தி எடுக்கறோம். மெட்ராஸ் டு பெங்களூர் வரும்போது, புல் பர்த்லயும் அவளே படுத்துகிட்டா. சைட்ல திருப்பி படுக்கவைக்கலாம்னா பாவம் குழந்தைக்கு காது வலிக்குமோன்னு நினைச்சு, நான் ஒரு ஓரமா ஒருக்களிச்சு படுத்துகிட்டு வந்தேன். கொடுமையா இருந்தது. இந்த அழகுல முதல்ல சைட் லோயர் தான் குடுத்தாங்க. அதுல நான் மட்டுமே படுக்கற்து கஷ்டம். சரி யார் கிட்டயாவது சொல்லி மாத்திக்கலாம்னு நினைச்சா, எல்லா லோயர்லயும், ஒரு கைக்குழந்தை இருக்கு. எங்க அம்மா, கணவர் இரெண்டு பேருக்குமே அப்பர் பர்த். அப்புறம் கடைசியா, பக்கத்து ப்ர்த்ல ஒரு பொண்ணு வந்தாங்க. அவங்க கிட்ட கெஞ்சி, அவங்க பெரிய மனசு பண்ணி விட்டுக் குடுத்தாங்க. அதுல படுத்துக்கிட்டு வந்ததுக்கே இப்படி. சைட் லோயர்ல படுக்கற்துக்கு பதிலா, தரைலயே படுக்கலாம். அவ்ளோ மோசம். ஒரே காசுக்கு எப்படி இவ்ளோ வித்தியாசம் இருக்க முடியும்? குழந்தைய கூட்டிக்கிட்டு வீட்டு வாசப்படி தாண்டக் கூடாதுங்க.
2 Comments:
மொட்டை போடுறது தான் ரொம்ப கஷ்டமுன்னு நினைக்கறேன். என்னோட பொண்ணு அழுதத நினைச்சா, இன்னிக்கும் கஷ்டமா இருக்கு. :( இந்த அழகுல ஒரு மொட்டையோட நிறுத்த கூடாது, மூணு போடனும்னு டார்ச்சர் வேற. கிட்ட வராதீங்கன்னு சொல்லிட்டோமுல்ல... :)
அதே கேஸ் தான் இங்கயும். ஒரு மொட்டைக்கே கதி கலங்கி போச்சு! :(
(Very sorry for the long delay! Longest delay possibly in the blogosphere!!! )
Post a Comment
<< Home