Thiravukol

*** The Key to my thoughts in Tamil ***

Name:
Location: Basel, Switzerland

https://www.instagram.com/mail2subha/

Friday, June 16, 2006

Adolescence.

டுபுக்கோட இந்த பதிவ படிச்சுட்டு, தேன்கூடுனு ஒண்ணு இருக்குனு தெரிஞ்சுது. அங்க போய் பார்த்ததில நிறைய கதைகள் adolescence பத்தி படிக்க கிடைச்சுது. எல்லாமே ரொம்ப நல்லா இருந்தது. இளவஞ்சியோட இந்த பதிவு ரொம்பவே மனச பாதிச்சது. Awesome.

ஆனால் இப்பதிவை எழுதக் காரணம், நிலாவோட
இந்த கதை. படிச்சுட்டு என்னோட டீன்ஏஜ் ஞாபகம் வந்தது. சரின்னு ஒரு பின்னூட்டம் எழுதினேன். அடிச்சு முடிச்சு "பப்ளிஷ்" க்ளிக் பண்ணினேன். பார்த்தா பின்னூட்டம் காணாம போயிடிச்சு. திருப்பி டைப் பண்ண அலுத்துக்கிட்டு அப்படியே விட்டுட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு போய் பார்த்தா, "பொண்ணுங்க எல்லாம் ரொம்ப விவரமானவங்க. இவ்ளோ அப்பாவி கிடையாது. 1960sல தான் இப்படியெல்லாம் இருந்து இருப்பாங்கனு" பின்னுட்டமெல்லாம் வந்து இருந்தது. இது ஏதுடா இவ்ளோ misconceptionனு நான் மெனெக்கெட்டு என்னோட கருத்த திரும்ப டைப் பண்ணி அனுப்பினேன். அதை பற்றி மேலும் என்னோட கருத்துக்கள் இங்கே.

பதிமூணு வயசுல, பயாலஜி டீச்சர் கிட்ட, "கோழி தான முட்டை போடுது? அப்புறம் எதுக்கு கோழி பண்ணைல சேவல்"னு நான் கேட்க, டீச்சர் திருதிருனு முழிச்சுட்டு, "சிட் டௌன்" சொல்லிட்டாங்க. எனக்கு ஏக பெருமை, ஆஹா டீச்சரயே மடக்கிட்டோமேன்னு. வீட்டுக்கு வேற வந்து இதை சொல்லி பீத்திக்கிட்டேன். எங்க அம்மா முகத்தில ஈ ஆடலை. அக்கா நமுட்டு சிரிப்பு சிரிச்சுட்டு போயிட்டா. அச்சச்சோ! எதோ விஷயம் இருக்கும் போல இருக்கே?னு நானும் மேல கேள்வி கேக்காம பேசாம இருந்துட்டேன்.

அதே பதிமூணு வயசுல, பெரியவளானத வெட்கப்பட்டுகிட்டு என்னோட நெருங்கிய தோழிக்கிட்ட கூட சொல்லலை. சத்தியம் வேற செஞ்சேன், இன்னும் ஆகலைனு. பாவம் எனக்காக ரொம்ப நாள் வருத்தப்பட்டா!

பதினஞ்சு வயசுல, திருட்டுத்தனமா மில்ஸ் & பூன், ரமணி சந்திரன், சரித்திர கதைனு எல்லாமே படிச்சேன். ஆனா எதை பத்தியும் சரியான விவரம் தெரியாது. கேள்வி கேட்கணும்னு தோணவும் தோணாது. திட்டு விழுமோன்னு பயம். தோழிங்க கிட்ட பேசலாம்னா, தப்பா நினைச்சுடுவாங்களோன்னு பயம். ஒரு வேளை அவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சு, நம்மள அப்பாவின்னு கிண்டல் பண்ணிடுவாங்களோன்னு பயம். இந்த கண்றாவி புடிச்ச படம் எல்லாம் வேற பாத்துட்டு, கட்டி புடிச்சா கர்ப்பம், முத்தம் குடுத்தா கர்ப்பம், கல்யாணமானா ஆட்டோமேட்டிக்கா கர்ப்பம், பக்கத்து பக்கத்துல படுத்துக்கிட்டா கர்ப்பம்னு எல்லாம் நினைச்சிக்கிட்டு இருந்தேன்.

ஒரு வழியா தைரியத்த வரவழிச்சிக்கிட்டு, என்னோட பதினாறாவது வயசுல, "காண்டம்"னா என்ன? அத எதுக்கு யூஸ் பண்ணுவாங்க? னு என்னோட 19 வயசு அக்கா கிட்ட கேட்டேன். அவளுக்கு எங்கிட்ட விளக்கமா சொல்ல கூச்சம். எதோ தத்து பித்துனு உளறினா. சரின்னு, அவ எனக்கு சொன்ன அறை குறை விஷயத்த எல்லாம், ஸ்கூல்ல போய் பீத்திக்கலாம்னு போனேன். அங்க நாலு, அஞ்சு பேரு சேர்ந்து எங்களுக்கு தெரிஞ்ச எல்லா விஷயத்தையும் சொன்னோம். அப்ப கூட, குழ்ந்தை எப்படி பொறக்குதுங்கற exact விவறம் யாருக்கும் தெரியலை. வழக்கம் போல, human reproduction chapterஅ choiceல விட்டுட்டாங்க டீச்சர்ஸ். (அதை படிச்சும் கூட ஒண்ணும் புரியலை எங்களுக்கு!) ஒரு வழியா பதினெட்டு வயசுல, thanks to internet and my friend who got in to medical college, அரசல் புரசலா விஷயம் புரிஞ்சுது.

எல்லாருமே என்னை மாதிரி மக்கா இருந்துருப்பாங்கன்னு சொல்ல வரலை. ஆனால், ரொம்ப குறைவான பேருக்கு தான் எல்லா விஷயமும் தெரிஞ்சு இருந்தது. 10 வருஷம் ஆயிடிச்சு. இப்ப எப்படியோ தெரியலை. நிறைய exposure இப்போ இருக்கற பொண்ணுங்களுக்கெல்லாம். ஆனா என்னா? பதினாறு வயசுக்கு பதிலா பதிமூணு வயசுலயே குழப்பம்னு வச்சுக்க வேண்டியது தான்!

10 Comments:

Blogger ilavanji said...

என்னோட பதிவில் சுட்டி பிடித்து இங்கு வந்தேன்!

நல்லா எழுதறீங்க. ஏன் எல்லா பதிவுகளுக்கும் ஆங்கில தலைப்பு?!

www.thamizmanam.com, www.thenkoodu.com ல சேர்ந்துக்கங்க... :)

2:17 AM, June 17, 2006  
Anonymous Anonymous said...

//ஆனா என்னா? பதினாறு வயசுக்கு பதிலா பதிமூணு வயசுலயே குழப்பம்னு வச்சுக்க வேண்டியது தான்! //

Very true

3:07 AM, June 18, 2006  
Blogger யாத்ரீகன் said...

ஹீம்... இப்படிப்பட்ட அறியாமை நிலவுவது சரின்றீங்களா, தப்புன்றீங்களா ? பசங்கனு பார்க்கையில கட்டாயம் இந்த அறியாமை களையப்படனும், காரணம் மெடிக்கல் காலேஜ் நண்பர்கள் வரைக்கும் யாரும் பொறுப்பதில்லை, they have easy access to such things (when compared to girls) at school time itself...

11:33 AM, June 22, 2006  
Blogger யாத்ரீகன் said...

அட சொல்ல மறந்துட்டேன்.. உங்க ப்ரொபைல் போட்டோ காரெக்டர் சுப்பர்ங்க.. அது நான் இரசிச்சு பாத்த படங்கள்ல ஒண்ணு.. :-))

11:35 AM, June 22, 2006  
Blogger B o o said...

எல்லாருக்கும் ரொம்ப சாரி இவ்ளோ லேட்டா பதில் சொல்றதுக்கு.

இளவஞ்சி - வருகைக்கு நன்றி. ஆங்கில தலைப்பு: because I want the PERMALINK to be readable. ரொம்ப அல்பக் காரணமா இருக்கா??

டுபுக்கு - ஆனா இது எங்க போய் முடியுமோன்னு தான் பயமா இருக்கு!

7:11 PM, June 29, 2006  
Blogger B o o said...

sudha - Teachers and parents should be more forthcoming with the facts of life, according to me. It will surely help.

யாத்திரீகன் - கண்டிப்பா தப்பு தான்! பசங்க, பொண்ணுங்க ரெண்டு பேருக்குமே sex education ரொம்ப முக்கியம்.

Boo எனக்கும் ரொம்ப பிடிச்ச கேரெக்டர். அத பிடிக்காம இருக்க முடியுமா?! :)

7:18 PM, June 29, 2006  
Blogger நிலா said...

இப்பத்தான் இந்தப் பதிவைப் படிச்சேன்

நல்லா எழுதறீங்க. தேன் கூடு போட்டிக்கு எழுதலாமே?

12:47 PM, July 10, 2006  
Blogger B o o said...

Sorry again for the delayed reply Madura and Nila.

மதுரா - எனக்கும் சந்தேகமா தான் இருந்தது. நம்ப மட்டும் தான் இவ்ளோ மக்கா இருந்தமோன்னு!

நிலா - நன்றி. முதல்ல நான் தமிழ நல்லா எழுதக் கத்துக்கறேன். அப்புறமா போட்டிக்கு எல்லாம் எழுதலாம்! :)

2:35 PM, July 23, 2006  
Blogger Kowsalya Subramanian said...

I also felt the same about sex education when I had to get some tips before my marriage [ungala vida romba late - ennaku medical college friend-lam illai :( ]

But now I have a kid who is 5 years old and when she asked me how she was born, I didn't know how to explain her.

I just told after I got married, I prayed God and He gave you. I feel so nervous and try to change topics. So I think the parents also should be taught on how to explain their children about this.

9:25 AM, July 28, 2006  
Anonymous Anonymous said...

this experience was not only for you; for almost all the girls (some exception here and there). I've seen people dont want change their misconception even after marriage, which is very bad and painful to husband and other family members. Once upon a time(Raaja Time-la)... Sex education taught in the temple from scuptures and painting, when people does not want talk about it explictly but they conveyed the message in at right age and right time, I believe.

But now kids are having over exposer to the sex by internet.

I dont know what is right way of teaching them.

Any Idea.

8:01 AM, November 01, 2006  

Post a Comment

<< Home

free invisible hit counter