அம்மா! பால்!
எனக்கு நாலு, அஞ்சு வயசு இருக்கும் போது காலைல ரொம்ப சீக்கிரமாவே எழுந்துடுவேன். 5 மணிக்கெல்லாம் எழுந்து எங்க அப்பா அம்மாவப் புடுங்க ஆரம்பிச்சுடுவேன். அவங்க ஒண்ணும் அசையற மாதிரி தெரியலைனா, நான் பாட்டுக்கு விளையாட ஆரம்பிச்சுடுவேன். தூண் எல்லாம் ஸ்டூடண்ட்ஸ், நான் தான் டீச்சர். ஒவ்வொரு தூண்லயும் ஒவ்வொரு பேர சாக்பீஸ்ல எழுதி இருப்பேன். அட்டென்டன்ஸ் எடுத்து, நானே யெஸ் மிஸ் சொல்லி, பாடம் நடத்தி, டெஸ்ட் வச்சு, பேப்பர் திருத்தி, மார்க் போட்டு, ஸ்கேலால ரெண்டு அடி போட்டு, .... அது ஒரு தனி உலகம்.
அப்ப எங்க வீட்ல மாடெல்லாம் இருந்தது. அதனால, கோனார் வந்து பால் கறந்துதான் டீ, காபி எல்லாம். அவர் எப்படா வருவார்னு வாசல்லயே தேவுடு காத்துக்கிட்டு இருப்பேன். அவர் வந்து பால் கறக்கறத வேடிக்கை பார்ப்பேன். அப்புறம் எங்கம்மா பால் காச்சறத வேடிக்கை. முடிச்சு அடுப்ப அணைச்ச அடுத்த நிமிஷம், "அம்மா பால் குடு, பால் குடு"ன்னு கேக்க ஆரம்பிச்சுடுவேன். எங்கம்மா, "கொஞ்ச்ம் இரேன்டி, ஆத்தி தான் குடுக்க முடியும்னு" சொல்லிக்கிட்டே பால ஆத்தி பாட்டில்ல ஊத்தி குடிப்பாங்க. (நாலு வயசு வரைக்கும் நான் பாட்டில் பார்ட்டி!) பாட்டில்ல பால் ஃபுல்லா வேற இருக்கணும். இத்துணூன்டு கொறஞ்சாக் கூட அடம் தான். கட கடன்னு ரெண்டே நிமிஷத்துல குடிச்சுட்டு, என் டீச்சர் வேலைய விட்ட எடத்துலேந்து தொடரப் போய்டுவேன்.
வீட்லதான் இப்படின்னா, ஸ்கூல் லீவுல பெங்களூர்ல இருக்கற எங்க பெரியம்மா வீட்டுக்கு போய் அவங்கள பாவம் காலைல அஞ்சறை மணிலேந்து பால் பால்னு புடுங்குவேன். ஒருவழியா பால் வந்து பாட்டில்ல குடுப்பாங்க. புல்லா வேணும்னு அடுத்த புடுங்கல். பாவம்! அவங்க பொண்ணு அர டம்ளர் பால் குடிக்க அரை மணி பண்ணும். அந்த மாதிரி நினைச்சு, அரை பாட்டில் குடுப்பாங்க. நாம ஃபுல்லுக்கு குறைச்சலா குடிக்க மாட்டோம்னு அவங்களுக்கு தெரியாது! இப்படி போற இடத்துல எல்லாம் பால்குடி மாறாத குழந்தைனு பேரெடுத்த ஆளு நானு!
இதெல்லாம் இப்போ எனக்கு ஏன் ஞாபகம் வந்ததுன்கறீங்க? என் பொன்னரசி ரெண்டு நாளா அடிக்கற கூத்துனால தான். 15 மாசம் ஆகுது அவளுக்கு. அப்பப்போ அஞ்சாறு வார்த்தை பேசினாலும் இது வரைக்கும் ஒரு முழு வாக்கியம் சொன்னதில்லை. இன்னைக்குப் பாருங்க! காலைல அஞ்சே முக்காலுக்கு எழுந்து, என்னை ரெண்டு தட்டு தட்டி, "அம்மா, அம்மா! பால் வேணும்"னு சொன்னாளே பாக்கணும்! அவங்க அப்பாக்கு பெருமைத் தாங்கலை. எனக்கோ இன்னும் எதுலயெல்லாம் என்னைக் கொண்டுப் பொறந்து இருக்காளோன்னு அடிவயித்துல கிலி!!!

5 Comments:
Neega graamathilaya valardeenga ? veetla oonjal ellam irundirukkumae! wwoooww!
naan fulla Madrasla thaan valardhaen, adhanala mattu kottai, vayal ellam cinemavula parthu thaan theriyum.
Brings back memories.. We tell this story every day to almost any one who would hear.. :-)
Kali kaalathil kai mel palan.. neenga unga amma va anju maniku ezhupineenga.. unga ponnu ungala ippa ezhuppara :)
நாலு வயசுல நடந்தது இன்னும் ஞாபகம் இருக்கா...அப்டியே இன்னும் கொஞ்சம் ரிவர்ஸ் கியர் போட்டீங்கனா போன ஜென்மத்துல என்னவா இருந்தீங்கன்னு கூட தெரியும் :-)
(சும்மா தமாசுக்கு சொன்னேன் சீரியஸா எடுத்துக்காதீங்க)
beautiful! loosu maadiri periyyya sirippoda onngaloda post-a padichen. 4 vayau varaikkum bottle fulla paal kudicha neenga adisaya kozhandai thaan! en vaarisu eppo bottlela niruthitho, appove paalukku makkar aarambichachu!
Post a Comment
<< Home