Thiravukol

*** The Key to my thoughts in Tamil ***

Name:
Location: Basel, Switzerland

https://www.instagram.com/mail2subha/

Monday, January 01, 2007

உருகுதே மறுகுதே...

உருகுதே மறுகுதே, ஓரே பார்வையாலே
ஒலகமே சொழலுதே உன்ன பார்த்ததாலே

தங்கம் உருகுதா, அங்கம் கரையுதா,
வெட்கம் உடையுதா, முத்தம் தொடருதா
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்சம் நாளா

உருகுதே மறுகுதே, ஓரே பார்வையாலே
ஒலகமே சொழலுதே உன்ன பார்த்ததாலே


தங்கம் உருகுதே, அங்கம் கரையுதே,
வெட்கம் உடையுதே, முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா

உருகுதே மறுகுதே, ஓரே பார்வையாலே
ஒலகமே சொழலுதே உன்ன பார்த்ததாலே


அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக் கதை பேசி பேசி விடியுது இரவு
ஏழு கடல் தாண்டி தான் ஏழு மலை தாண்டி தான்
என் கருத்த மச்சான் கிட்ட ஒடி வரும் மனசு

நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டி பாக்குறேன்
காட்சியாவும் நெசமா மாற கூட்டி போகுறேன்
ஓ சாமி பாத்து கும்பிடும் போதும் நீதான நெஞ்சில் இருக்கே..

உருகுதே மறுகுதே, ஓரே பார்வையாலே
ஒலகமே சொழலுதே உன்ன பார்த்ததாலே


ஊர விட்டு எங்கயோ வேரருந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலதான வாழுறேன்

கூர பட்டு சேல தான் வாங்க சொல்லி கேக்குறேன்
கூடு விட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன்
கடவுள் கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா?
உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதி கொடுக்கவா?
ஓ மையிட்ட கண்ணே உன்ன மறந்தா இறந்தே போவேன்

(உருகுதே மறுகுதே..)

சங்கர் மகாதேவனுக்கு ஒரு தேன் bottle வாங்கி அனுப்பலாமான்னு பார்க்கறேன். மனுஷன் கலக்கி இருக்கார்! என்ன குரல்! Just Wow! பாட்டுக்கு ஒரே திருஷ்டி - ஷ்ரேயா கோஷல் முதல் வரில "ஒலகமே" க்கு பதிலா "ஒழகமே"ன்னு பாடறாங்க! ழ வராம ள சொல்லுவாங்க கேட்ருக்கேன். இது என்னவோ புதுசா இருக்கு. ஆனா அடுத்தடுத்து வர்ற வரிகள சரியா உச்சரிச்சு இருக்காங்க. Strange! எப்படியோ, எனக்கு ரிபீட் மோட்ல போட்டு கேக்க ஒரு பாட்டு கிடைச்சாச்சு! சந்தோஷம்! :)

6 Comments:

Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

இப்பிடித்தான் இளையராஜா இசைநிகழ்ச்சிலே 'காற்றில் எந்தன் கீதம்' பாடும்போது கூட 'காணாமல் உன்னைத் தோடுதே'ன்னு பாடினாங்க. கடைசி இடத்திலே திருத்திகிட்டாங்க. but, what a voice.

மு.பி.கு(முக்கிய பின் குறிப்பு):
1. (இல்லே..உங்களுக்கு சந்தேகம் வந்தாலுமே..ன்ன்னு சொல்லிவைக்கலாமேன்னுதான்! :O) படம் நடிச்ச ஷ்ரேயா வேற நான் வேற. அவங்க 'மழை' நடிக்க ரொம்ப முன்னாலேயே நான் என் பதிவை ஆரம்பிச்சு இந்தப் பேரையும் வைச்சாச்சு.

1:09 PM, January 05, 2007  
Blogger B o o said...

வருகைக்கு நன்றி ஷ்ரெயா! ரொம்ப பாபுலரான பேரு இப்பொதைக்கு ஷ்ரேயா தான்! :) You are right about Shreya Goshals voice. Awesome. But this song is Shankar's!

6:59 PM, January 06, 2007  
Blogger Premalatha said...

என்னா படம்? Raagaல இருக்கா? எனக்கும் சங்கர் மகாதேவன் குரல் பிடிக்கும்.

2:19 PM, January 23, 2007  
Blogger B o o said...

Latha,
Its from the movie Veiyil. Chk it out in musicindia. Dont know about Raaga.
http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.8626/

5:12 PM, January 23, 2007  
Blogger B o o said...

http://www.musicindiaonline.com/mus
ic/tamil/s/movie_name.8626/

5:13 PM, January 23, 2007  
Blogger Unknown said...

ஆனா எங்க பொண்ணு வானதி "ப்பா ப்பா ப்பா" "அப்பா" தவிர வேற சொல்றதே இல்லை

6:43 PM, August 05, 2008  

Post a Comment

<< Home

free invisible hit counter