Thiravukol

*** The Key to my thoughts in Tamil ***

Name:
Location: Basel, Switzerland

https://www.instagram.com/mail2subha/

Wednesday, July 26, 2006

எனக்கொரு சந்தேகம்...

1. கஷ்டப்பட்டு என்னோட பதினாலு மாசக் குழந்தை டாடா காமிச்சா, "இந்தக் கையாலயா சொல்வாங்க? அந்தக் கையால காமி" ன்னு ஏன் எல்லாரும் சொல்றாங்க?

2. ரொம்ப சாஸ்த்திரம், சம்ப்ரதாயம் பாக்கற மாமிகள், பாட்டிகள் கூட சந்திகால வேளையில, டிவில சீரியல் பாக்கறேன் பேர்வழின்னு அதுல காட்ற எழவு, ஒப்பாரி எல்லாத்தயும் ஃபுல் வால்யூம்ல வெள்ளிக் கிழமைன்னு கூட கண்டுக்காம எப்படி பாக்கறாங்க?

3. இந்த பெரிசுங்க எல்லாம் குழந்தை பேர முதல்ல கேட்கறாங்களோ இல்லையோ, "என்ன நட்சத்திரம்" ன்னு எதுக்கு கேட்கறாங்க? அது தெரிஞ்சு என்ன பண்ண போறாங்க?

4. "நீ வாயத்திறந்து சொன்னா தான தெரியும்? உன் மனசுலயே நினைச்சுக்கிட்டு இருந்தா எனக்கு எப்படித் தெரியும்" ன்னு என் கிட்ட கேக்கறவங்க எல்லாம் அவங்க மனசுல நினைக்கறத மட்டும் நான் புரிஞ்சு நடக்கணும்னு எப்படி எதிர்ப்பாக்கறாங்க?

5. கணவன்-மனைவி பிரச்னையா? மாமியார்-மருமகள் பிரச்னையா? மனசு சரியில்லையா? வேலை சரியா அமையலையா? இதயக் கோளாறா? இல்லை கேன்சரா? - "ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரியா போய்டும்"ன்னு எந்த கேணையன் சொன்னான்?

6. ஓப்ரா ஷோ வந்தா மட்டும் நல்லா நாக்க தொங்க போட்டுக்கிட்டு ஊர்வம்பு பாக்கற நான், "இனி அச்சமில்லை அச்சமில்லை"ன்னு ஜெயா டிவில லக்ஷ்மி வந்த உடன, அலறி அடிச்சிக்கிட்டு ஏன் சேனல் மாத்தறேன்?

7. சத்யராஜ் இந்த வயசுல இளவயசு பொண்ணுங்களோட இப்படி அசிங்க ஆட்டம் போடறாரே, நாளைக்கு சிபிராஜுக்கு கல்யாணம் ஆயிட்டா, வீட்டுக்கு வர்ற பொண்ணு மாமனாராப் பார்த்து எப்படி முகம் குடுத்து பேசும்?

8. இந்த "ஊருக்கு உபதேச" பார்ட்டிங்க எல்லாம் எப்ப திருந்துவாங்க?

9. இந்த ஷாம்பு பாட்டில்ல எல்லாம், 10 நிமிஷம் ஊரவும் ன்னு போட்டிருக்கே? அந்த 10 நிமிஷம் என்ன பண்றது? (பாத்ரூம் போகும் போது வர்ற "அபாரமான" யோசனையெல்லாம் அப்ப வரமாட்டேங்குதே ஏன்?)

10. ஒன்பது பாயிண்ட் எழுதிட்டு, இன்னொண்ணு எழுதி ரவுண்டா பத்து ஆக்கிடலாம்னு நினைச்சா, ஒண்ணுமே தோணமாட்டேங்குதே ஏன்?!!! :)

12 Comments:

Blogger Jayaprakash Sampath said...

பதில்கள் :

1. 14 மாசக் குழந்தை கிட்டதான் அப்படிச் சொல்ல முடியும். வாயைத் திறந்து பேச ஆரம்பிச்ச பின்னாலே, நம்ம வாயைக் குடுத்து மாளுமா?

2. "சந்திகால வேளையில, டிவில சீரியல் பாக்கறேன் பேர்வழின்னு அதுல காட்ற எழவு, ஒப்பாரி எல்லாத்தயும் ஃபுல் வால்யூம்ல வெள்ளிக் கிழமைன்னு கூட கண்டுக்காம எப்படி அம்மா பார்க்கிறா?" ன்னு உங்க பொண்ணு, கொஞ்ச காலம் கழிச்சு பிளாக் எழுதி நொந்துக்கறப்ப தெரிஞ்சுப்பீங்க.

3. ஒரு வேளை கோயிலுக்குப் போனால், அர்ச்சனை பண்றதுக்காக இருக்குமோ? சொல்லிடுங்களேன் , என்ன இப்ப?

4. No comments

5. நல்லா யோசிச்சுப் பாருங்க, சரியாயிடும்னு சொல்லியிருக்கமாட்டாங்க, பழகிரும்னு சொல்லி இருப்பாங்க. எல்லாம் இருகோடுகள் தத்துவம் தான்

6.இந்த வயசுலே, லட்சுமி பண்ற கட்டப் பஞ்சாயத்தெயெல்லாம் பாக்கிறது, சொந்த செலவுலே சூனியம் வெச்சிக்கிறதுக்குச் சமம். சூனியத்தை ரிமூவ் பண்றதுக்கும் அதிகமாச் செலவாவும். அதனாலே, ராத்திரி 11 மணிக்கு மேலே ஜெயாடீவி பக்கம் போகப்டாது.

7. சினிமாவிலே ஆட்டம் போட்ட ஒரு இளசே, பெருசுக்கு மருமகளா வந்தா எப்படி இருக்கும்? அதுக்கு, இது பெட்டரில்லையா?

8. தினந்தந்தியிலே கன்னித் தீவு முடியற அன்னைக்கு

9. No Idea. ஷாம்பு, சீப்பு போன்ற 'தலை'யான விஷயங்கள் கூட எனக்குள்ள உறவு விட்டுப் போய் கனகாலமாச்சு.

10. அடுப்பிலே பாலை வெச்சுட்டு, அவசரமா வந்து பதிவு போட்டா அப்படித்தான். தமிழ்மணத்தையும், தேன்கூட்டையும், ஒரு ரவுண்டு விட்டுட்டு வந்தா, இதைப் போல நூறு frustables கிடைக்கும்.

எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா ஒரு ஸ்மைலி :-)

10:25 AM, July 27, 2006  
Blogger கார்த்திக் பிரபு said...

prakash pugunthu vilaiyadi irukaru

sari adhai vidunga ennkum idhai pol pala doubts varum udharanathukku partheenganna.

"bus il payanikkum podhu saga payaniku phone varum avar 'hello'nan than pesurane..sengal pattla irukane enbaar.aanaal vandiyo thambarthil irukum(oru velai theriyamal soli irukalam nu nenga ninaikalam..aanal eppadinga nan partha pala perum theriyama solvanga)

1:45 PM, July 27, 2006  
Blogger சீமாச்சு.. said...

என்ன பூ.. இங்கிலீஷில் தான் கலக்கறீங்கன்னா.. தமிழ்-ல அதுக்கு மேல இருக்கீங்களே..

நல்ல கேள்விகள் தான். ஒவ்வொண்ணுத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கத் தான் செய்யுது. ஒரு வேளை ஒக்காந்து யோசிச்சாத் தெரியும் போல.. :)

எல்லாக் கேள்விகளுக்கும் ப்ரகாஷ் மாதிரி பதில் அளிக்கிற பொறுமை கிடையாது.. அதனால.. ஒண்ணே ஒண்ணுக்கு மட்டும்...

இங்க அமெரிக்காவிலே..குழந்தையைப் பார்த்தா பேர் கேட்டுட்டு.. ஆஹா நைஸ் நேம்.. னு சொல்லிட்டு அங்கேயே மறந்து போவது மரபு.

அது மாதிரிதான் நம்ம ஊரில்.. குழந்தையுடன் வரும் தாயை பேர் கேட்டு விட்டு விடாமல்... என்ன நட்சத்திரம்..
"உத்திரட்டாதியா... பையன் பெரியஆளா வருவான்.. ஊரில பாதி வேலி அவனுதாதான் இருக்கும்.. ஒஹோன்னு வெச்சுக் காப்பாத்துவான்" என்றோ..

"மகத்து மங்கை ஜெகத்துல கெடக்காதுடா அம்பி.. பெரிய பொண்ணா ஆகும் போது கிளி மாதிரி கொத்திண்டு போயிடுவான்"
அப்படீன்னு அந்தந்த நட்சத்திரம் சொல்லி அதுக்கு மூத்தோர் சொல் சொல்லி வாழ்த்துவது நம்ம பழக்கம்..

தொடர்ந்து நல்லா எழுதுங்கள்..

சீமாச்சு.

5:17 PM, July 27, 2006  
Blogger சீமாச்சு.. said...

கார்த்திக்,
//"bus il payanikkum podhu saga payaniku phone varum avar 'hello'nan than pesurane..sengal pattla irukane enbaar.aanaal vandiyo thambarthil irukum(oru velai theriyamal soli irukalam nu nenga ninaikalam..aanal eppadinga nan partha pala perum theriyama solvanga)
//
கொளுத்திட்டீங்க.. நானே இது போல "சில" இடங்களில் சொல்லியிருக்கிறேன்.
எல்லாம் கேட்பவர்களுக்கு ஒரு நம்பிக்கைக்காகத் தான்..

சீமாச்சு

5:20 PM, July 27, 2006  
Blogger The Kid said...

enna Boo, mamiyaar thollaya ??
HD idha padicha parava illaya ??

;)

5:23 PM, July 27, 2006  
Blogger Unknown said...

//ரொம்ப சாஸ்த்திரம், சம்ப்ரதாயம் பாக்கற மாமிகள், பாட்டிகள் கூட சந்திகால வேளையில, டிவில சீரியல் பாக்கறேன் பேர்வழின்னு அதுல காட்ற எழவு, ஒப்பாரி எல்லாத்தயும் ஃபுல் வால்யூம்ல வெள்ளிக் கிழமைன்னு கூட கண்டுக்காம எப்படி பாக்கறாங்க?//

நல்ல கேள்வி. அதுவும் இந்த கோலங்கள்ல ஒரு வாரம் பூரா சாவு வீட்டையே காட்டினாங்க..

8:35 PM, July 27, 2006  
Blogger Unknown said...

Small piece of advice, Boo. Please enable comment moderation. It's safe and you also get the added advantage of your comments showing up in Thamizmanam comments section.

8:36 PM, July 27, 2006  
Blogger இரா.மோகன் காந்தி said...

10-உங்க மன்டையில்அப்படி என்ன இருக்கிறது 10வது சந்தேகம்

8:43 PM, July 27, 2006  
Blogger B o o said...

ப்ரகாஷ் - அச்சச்சோ! உங்க கிட்ட வாயக் குடுத்து மாட்டிக்கிட்டேனே! :)

கார்த்திக் - எங்க அப்பா இப்படி அடிக்கடி சொல்லுவாரு. அப்பதான் அந்த ஆளு வெயிட் பண்ணூவாருன்னு!

சீமாச்சு - நன்றி. நீங்க சொல்றது கரெக்ட். ஆனா எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை கிடையாது. என் பொண்ணு மூல நட்சத்திரம்ன்னு வேணா சொல்லிப் பாருங்க, அப்ப என்ன சொல்றாங்கன்னு பாப்போம்! :)

8:16 AM, July 28, 2006  
Blogger B o o said...

ப்ரதாப் - 10 பாயிண்ட்லயுமா உங்களுக்கு அப்படி தோணுது?

வெங்கடரமணி - என்னால ரெண்டு நிமிஷம் கூட பாக்க/கேக்க முடியலை!

மோகன் காந்தி - என்ன சொல்றீங்க? என் மண்டைல எதாவது இருக்கா இல்லையானு கேக்கறீங்களா? நியாயமான சந்தேகம் தான்!!!

8:21 AM, July 28, 2006  
Blogger The Kid said...

pathula aaru points perusungla pathi ezudhhi irrukinga, illya! adhAn kaetaen.

unmaya sollunga... yaaru inspiration? Mamiyara, narthanara ?? :)

btw: en vazkayilaeya mudhal thadavaya, "oongalukku nnu" mariyadha koduthu koopitu irrukeenga. Romba thanks. ;)

-Pratap

12:28 AM, August 01, 2006  
Anonymous Anonymous said...

Ha Ha Ha!

11:01 PM, August 01, 2006  

Post a Comment

<< Home

free invisible hit counter