Thiravukol

*** The Key to my thoughts in Tamil ***

Name:
Location: Basel, Switzerland

https://www.instagram.com/mail2subha/

Thursday, January 11, 2007

மழலை.

தமிழ்ல ப்ளாக் எழுத ஆரம்பிச்சது சில விஷயங்களுக்கு உதவுது. ரொம்ப நாளா ஆஷு பேசறதெல்லாம் பத்தி ஒரு பதிவு போடணும்னு நினைச்சிட்ருந்தேன். ஆனால் முழுக்க முழுக்க தமிழ்ல பேசறத எப்படி ஆங்கிலத்துல எழுதறதுன்னு யோசனை. தமிழ்ல எழுதலாம்னா அதுக்கு வணங்க மாட்டேங்குது. அதுக்கு ஒரே காரணம் - பேச்சு வழக்கும், எழுத்து வழக்கும் ஒரே மாதிரி இல்லாதது தான். பேச்சு வழக்கு மாதிரியே எழுதலாம்னு பாத்தா, என்னவோ தமிழ கொலை பண்ற மாதிரி இருக்கு. சுத்த தமிழ்ல எழுதினா டிவில "செய்திகள் வாசிப்பது" ன்னு அலற்ற மாதிரி இருக்கு. எதோ ரெண்டுங்கெட்டானா எழுதி வைக்கறேன்!

ஆஷு முதல்ல சொன்ன வார்த்தை - தாத்தா, ஆறு மாசத்துல. எங்கம்மா உடனே கோட்டை கட்ட ஆரம்பிச்சுட்டாங்க. எப்படி ஆஷு தன்னோட முதல் பிறந்த நாளுக்கு நன்றியுரை வாசிச்சு எல்லாரையும் அசத்த போறான்னு. ஆனால் குழந்தை அவசரப்படாம நிதானமா பாட்டின்னு சொல்றதுக்கு இன்னும் ஒரு வருஷம் ஆச்சு. தாத்தாக்கு அப்புறம் காக்கா, மாமா, பாப்பா, நாநா, டாடா.. ன்னு கொஞ்ச நாள் போச்சு. "மாமா" மா ஆகி, "மா" மெதுவா அம்மா ஆனது அவளுக்கு கிட்டதட்ட ஒரு வயசு இருக்கும் போதுதான். அவ அப்பாவையும் அம்மானே கூப்டுட்டு இருந்தா. அது பொறுக்கலை அந்த மனுஷருக்கு! அம்மானு கூப்ட குடுத்து வெச்சுருக்க வேண்டாம்? படாத பாடு பட்டார் அப்பான்னு சொல்ல வைக்க. அது என் பொண்ணாச்சே! அசையலை! "அது எப்படி பாப்பா சொல்றா, அம்மா சொல்றா ஆனா அப்பா வர மாட்டேங்குது? நீதான் நான் ஆஃபீஸ் போயிருக்கும் போது ஏதோ சொல்லி அவள மிரட்டி வச்சுருக்கன்னு" என் மேல வேற complaint. ஒரு வழியா அப்பாவும் வந்தது கிட்டதட்ட ஒன்றரை வயசுல. உடனே அவர் கிளம்பி வெளிநாடு போக வேண்டி இருந்தது. அதனால கடந்த மூணு மாசமா ஃபோன்ல தான் அப்பா! ஒரு வயசுல அவளோட பேரையும் சொல்ல ஆரம்பிச்சா. பொறந்ததுலேந்து கேட்டுக்கிட்டு இருக்காளே, அதனால இதுவே லேட்.

பதினெட்டு மாசத்துல "பாட்டி" சொல்ல ஆரம்பிச்சா. இப்ப எங்கம்மா கூட இருக்கற்துனால ஒரு நாளைக்கு நூறு பாட்டி சொல்றா. ரெண்டு வாட்டி பாட்டுனு கூப்டுட்டு, அப்புறம் பேர் சொல்லி கூப்பிடறா. என்னையும் அப்பப்ப பேர் சொல்லி கூப்பிடறா. "இதெல்லாம் உன் பாட்டியோட வச்சுக்கோ. என்னை பேர் சொல்லி கூப்ட நூறு பேர் இருக்காங்க. அம்மானு சொல்ல நீ ஒரு ஆளுதான். அதனால ஒழுங்கு மரியாதயா அம்மானு கூப்டு" ன்னு மிரட்டி வச்சுருக்கேன்! ஆனாலும் குழந்தை பேர் சொல்லி கூப்டாலும் நல்லாதான் இருக்கு! :) இப்போ, இருபது மாசத்துல, நான் சொல்றதெல்லாம் திரும்ப சொல்றா. நிறைய பேசறா. ஆனா வேத்து மனுஷங்கள கண்டா வெட்கம். வாய திறக்கற்து இல்லை. எங்கேந்து தான் குழந்தைகளுக்கு இந்த வெட்கம் வருமோ தெரியலை. எதோ ரெண்டு பேருக்கு முன்னால நம்ம குழந்தைய பேச சொல்லி பீத்திக்கலாம்னா முடியலை! இதுக்கா கஷ்டப்பட்டு பெத்தேன்?

8 Comments:

Anonymous Anonymous said...

Ha Ha Ha!

5:45 PM, January 11, 2007  
Blogger Kowsalya Subramanian said...

தமிழ்ல எழுதறது பத்தி நீங்க சொன்னது ரொம்ப சரி "பூ". ஆனாலும் நீங்க ரெண்டுங்கெட்டானா எழுதினது கூட கலக்கலா தான் இருக்கு :)

12:39 PM, January 17, 2007  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

Boo - உங்க ஆஷு மாதிரியே இங்க ஒரு பையன் இருக்கான் - வெளியாளுங்கள கண்டா வெட்கம். பையன் அது சொல்வான் இது சொல்வான் என்று அவங்கம்மா எங்ககிட்டே சொல்லிட்டு அவனை சொல்லிக் காமிக்க சொன்னா அவன் 'வாயத் திறப்பேனா பார்'னு உக்காந்திருப்பான். அம்மாவும் எவ்வளோ நாளா முயற்சிக்கிறாங்க.. ஒன்னும் நடக்கல. எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பா இருக்கும்!! :O)

6:30 AM, January 19, 2007  
Blogger B o o said...

S - அதயே தமிழ்ல எழுதற்து! :)

கௌசல்யா - நன்றி.

ஷ்ரேயா - அய்யோ பாவம் அந்த அம்மா. இதனால தான் நான் அப்படியெல்லாம் சொல்லிக்கறதே இல்லை! ஆனாலும் இந்த பெருசுங்க எல்லாம் விடறதில்லை. "பேசுவாளா? உன் பேரு என்ன?" ன்னு ஆஷுக்கிட்ட கேட்க, அது பேந்த பேந்த முழிக்க, "என் அக்காவோட பொண்ணு வயத்து பேத்தி ஒன்றரை வயசுல அந்த பேச்சு பேசும்" ன்னு அவங்க கம்பேர் பண்ண, நான் கடி ஆக, அதயேன் கேக்கறீங்க!!

6:47 PM, January 19, 2007  
Anonymous Anonymous said...

you have a nice blog. I just came across this today. but I didn't find any new posts...nice blog. tamizh-la blog padikka nalla thaan irukku :) Neengal mudindhaal " jayashree" in blog-i parungal..may be you will like it. http://mykitchenpitch.wordpress.com
though a recipe blog..it has a lot of other stuffs too.

4:04 PM, October 16, 2007  
Blogger Unknown said...

==//படாத பாடு பட்டார் அப்பான்னு சொல்ல வைக்க. அது என் பொண்ணாச்சே! அசையலை! "அது எப்படி பாப்பா சொல்றா, அம்மா சொல்றா ஆனா அப்பா வர மாட்டேங்குது?==/////////

ஆனா எங்க பொண்ணு வானதி "ப்பா ப்பா ப்பா" "அப்பா" தவிர வேற சொல்றதே இல்லை

6:38 PM, August 05, 2008  
Blogger Unknown said...

==//படாத பாடு பட்டார் அப்பான்னு சொல்ல வைக்க. அது என் பொண்ணாச்சே! அசையலை! "அது எப்படி பாப்பா சொல்றா, அம்மா சொல்றா ஆனா அப்பா வர மாட்டேங்குது?==/////////

ஆனா எங்க பொண்ணு வானதி "ப்பா ப்பா ப்பா" "அப்பா" தவிர வேற சொல்றதே இல்லை

6:40 PM, August 05, 2008  
Blogger anubharat said...

உங்க ப்ளாக் ரொம்ப நல்ல இருக்கு. த்வின்மோம் ப்ளாக் ல உங்க லிங்க் பார்த்து படிக்க ஆரம்பிச்சேன், அப்பறம் நிறுத்தவே இல்ல . எனக்கும் இந்த மாதிரி எல்லாம் எழுதனம்னு ஆசை வர அளவுக்கு எழுதிருக்கீங்க பூ . Kudos

12:34 AM, March 06, 2010  

Post a Comment

<< Home

free invisible hit counter