Thiravukol

*** The Key to my thoughts in Tamil ***

Name:
Location: Basel, Switzerland

https://www.instagram.com/mail2subha/

Tuesday, May 23, 2006

Ashu.

விளையும் பயிர்...! நீங்களே பாருங்க!

0 Comments:

Post a Comment

<< Home

Tuesday, May 16, 2006

Maambazham.

கும்பகோணம் வந்தது முதல் ஒரே மாம்பழ மழை தான். தக தக தக தங்க வேட்டை மாதிரி பழ பழ பழ மாம்பழ வேட்டைனு ஒரு போட்டி இருந்தா முதல் ஆளா நான் தான் போவேன். இது வரைக்கும் தின்னது போறாதுன்னு இனிமே திங்க போறத நினைச்சு ஜொள்ளு வேற!

இமாம் பசந்த், பங்கனபல்லி, காதர், ஒட்டு, மல்கோவா, செந்தூரா, பாதாமி(இது பெங்களூர்ல சாப்டது), அல்ஃபோன்சா, காலபாடி,... இப்படி பல வகையான வெரைட்டி சாப்டுட்டு, ருமானி க்காக வெய்டிங்! ருமானி தான் என்னோட ஆல் டைம் லவ்வு! எழுதும்போதே ஜொள்ளு கொட்டுது! இந்த வெய்யில்ல வ்ந்து இங்க மாட்டிக்கிட்டதுக்கு ஏதோ மாம்பழமாவது திங்க முடுயுதேன்னு சந்தோஷம்!

அப்படியும் 15, 20 வருஷம் முன்னாடி எங்க கிராமத்திலயும், இங்கயும் சாப்டதுக்கு ஈடேயில்லை. எங்க வீட்ல மாம்பழத்துக் கிட்ட கத்தியே போகாது. அப்படியே முழுசா தான் குடுப்பாங்க. தப்பி தவிறி கட் பண்ணிட்டாங்கனு வச்சுக்கோங்க, அடிதடி தான். கதிப்பு யாருக்கு, கொட்டை யாருக்கு! கதிப்ப ஏன் இவ்ளோ சின்னதா கட் பண்ணின, கொட்டையை ஏன் இப்படி ஒன்னுமே இல்லாம சீவியிருக்கனு, ஆளாளுக்கு எகிறி தள்ளிடிவாங்க. எதுக்கு வம்புனு எல்லாருக்கும் முழுசா குடித்துருவாங்க. கிராமத்துல மாந்தோப்பே இருந்தது. அதனால பஞ்சமே கிடையாது. அதுக்காக நம்ப திருடி திங்காம இருக்க முடியுமா? சாக்குல பழுக்கறதுக்காக அடுக்கி வச்சுருப்பாங்க. அதுலேந்து எடுத்து திம்போம். அப்புறம் தோப்புக்கே போய், மாங்கா பறிச்சு திம்போம். இதெல்லாம் போறாதுன்னு, மாயிலைய கொழுந்தா பறிச்சு, வீட்லேந்து உப்புக் கல்லும், புளியும் யாருக்கும் தெரியாம எடுத்திக்கிட்டு வந்து, அத கொஞ்சம் மாங்கொழுந்துல வச்சு, சுருட்டி திம்போம். ஆஹா! அதுக்கு ஈடே கிடையாது. அந்தந்த வயசுல அதது செஞ்சா, அதோட ஆனந்தமே தனிதான்.

இதெல்லாம் தவிர, மாம்பழத்த ரெண்டு கைலயும் வச்சு தேச்சு, கொல கொலன்னு செஞ்சு, ஒரு சின்ன ஒட்டை போட்டு, அத உரிஞ்சருது. கதிப்ப கட் பண்ணி ஒரு ஸ்பூனால சுரண்டி திங்க வேண்டியது. தோல் சீவி, துண்டம் போட்டு, போர்க் வச்சு குத்தி சாப்பிட வேண்டியது. இது யாராவது விருந்தாளி வந்து இருக்கும் போது மட்டும் தான்! மத்தபடி முழங்கை வரைக்கும் சாறு வழிய, நாக்கால நக்கி தின்னுட்டு, கொட்டைய பல்லால முடிஞ்ச மட்டும் சுரண்டி தூக்கி போட்டுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தான்!

3 Comments:

Anonymous Anonymous said...

Brought back lot of memories. Though my all time favourite place in the world is kkudi, Tkvoor-a மாம்பழத்தில் அடிச்சுக்க ஆளே(ஊரே) கிடையாது!

4:39 PM, May 16, 2006  
Blogger யாத்ரீகன் said...

பேவரைட் பழத்தை இப்படி வர்ணிச்சிட்டீங்க.. அஹா !! ஆசையக்கெளப்பி விட்டுட்டீங்களே..!! nice flow you have...

11:43 AM, June 22, 2006  
Blogger B o o said...

s - ரொம்ப வாத்ஸவம்! :)

யாத்திரீகன் - மெட்ராஸ்ல தான இருக்கீங்க? அப்புறம் என்ன? சீசன் முடியறதுக்குள்ள முந்திக்கோங்க! இந்த வருஷம் படுச்சீப்பா கிடைக்குதுனு எங்கம்மா சொல்றாங்களே?!

7:22 PM, June 29, 2006  

Post a Comment

<< Home

Friday, May 05, 2006

Lifela...


சில பேரை திருத்தவே முடியாது. என்ன பண்ணினாலும் திருத்தவே முடியாது. இந்த டாக் ஷோஸ் எல்லாம் பார்த்துட்டு நான் கூட பேசி தீர்க்க முடியாத ப்ரச்சனையே இல்லைனு நினைச்சுக்கிட்டு இருந்தேன். கம்யூனிகேஷன் இல்லாததால தான் ப்ராப்ளம் வருதுனு நினைச்சுக்கிட்டு இருந்தேன். உட்கார்ந்து பேசினா எல்லாம் சரியாயிடும்னு பைத்தியம் மாதிரி நினைச்சேன். ஆனா சில பேரை திருத்தவே முடியாது.

3 Comments:

Anonymous Anonymous said...

திருத்த முடியாத ஜென்மங்களை நினைத்து நீ உன் சந்தோஷத்தை கெடுத்துக்காத! விட்டுத்தள்ளு!

6:18 PM, May 05, 2006  
Blogger Premalatha said...

உக்கார்ந்து பேசிட்டு, பேக்கு முழியப்பார்த்து குழம்பிபோயி, "எங்க நான் சொன்னதெல்லாம் திருப்பிச் சொல்லு"ன்னு கேட்டாச்சு. அப்படியே வார்த்த மாறாம திருப்பி வருது. ரெண்டு நாள் கழிச்சு எல்லாம் "replay" ஆகுது. எனக்குப் புரியவேயில்லயா. திருப்பி உட்கார்ந்து பேசி, பேக்கு முழி முழிச்சு, "திருப்பி சொல்"லி.. life goes in a cycle. That is why people call it a "lifecycle"!

8:46 PM, May 05, 2006  
Blogger B o o said...

S, Latha and chithappa - two words! I KNOW!

7:23 PM, June 29, 2006  

Post a Comment

<< Home

Tuesday, May 02, 2006

Kavidhai, Kavidhai.


புதிதாய் பூத்த பூந்தளிரே!

மலராய் மலரும் மருக்கொழுந்தே!

மனதை மயக்கும் மோகினியே!

சிங்கார சிரிப்பில் சித்திரமே!

நெஞ்சில் நிற்கும் நின்நினைவுகளே!

ஆண்டொன்று ஆனது அற்புதமே!

நூறாண்டு வாழ்வாய் நிச்சயமே!

வாழ்வாங்கு வாழ வாழ்த்துவமே!

தாத்தா
பாட்டி.

(ஆஷு வின் முதல் பிறந்த நாளுக்கு என் அம்மா எழுதிய கவிதை.)

3 Comments:

Blogger S.G.Ramkumar said...

Arumaiyanaa kavaithai. ammavakkum adhai post panninae ungalakkum oru sabaash.

10:09 PM, May 03, 2006  
Blogger Blogeswari said...

Lovely!

9:40 AM, May 04, 2006  
Anonymous Anonymous said...

Paatiya adichukka aale kidaiyadhu.. Did you show this to paatti?

7:51 PM, May 04, 2006  

Post a Comment

<< Home

free invisible hit counter