வாண்டுக்காக...
சுக்கான் குத்தறதும், சோறு கொதிக்கறதும்
பிள்ள அழறதும், பேசாதே என்கிறதும்
வா வா என்கிறதும், மாட்டேன் போ என்கிறதும்
சண்டை போடறதும், மண்டை உடையறதும்!
இது எங்க பாட்டி ஆஷுக்கு அடிக்கடி பாடற பாட்டு. இதுக்கு நல்லா action பண்ணிக்கிட்டே பாடலாம். பாடல் அறைகுறையா இருக்குன்னு நினனக்கறேன். முழுவதும் தெரிஞ்சவங்க சொல்லுங்க.
குண்டு பையன் சுண்டுவாம்
சுவரின் மேலே உட்கார்ந்தான்.
சுண்டு கீழே விழுந்தானே
துண்டு துண்டாய் ஆனானே.
ஒண்ணா சேர்க்க முடியலையாம்.
ராஜா வந்தும் முடியலையாம்.
ராணுவம் வந்தும் முடியலையாம்!
இது நான் ஒரு தமிழ் ரைம்ஸ் புத்தகத்துல படிச்சேன். ஆஷுவோட current favorite. யாரோ ஹம்ட்டி டம்ப்டிய தமிழ்ல மொழி மாற்றம் செஞ்சுருக்காங்க. நல்லா தான் இருக்கு!
குட்டி எலி அன்றொரு நாள்
குதிச்சு குதிச்சு ஓடிச்சாம்!
யானை, புலி, சிங்கம் காண
ஆசை கொண்டு ஓடிச்சாம்!
உயரமான மரத்தில் ஏறி
உலகமெல்லாம் பார்த்ததாம்!
தூரத்திலே சிங்கம் ஒன்று
தூங்குவதைப் பார்த்ததாம்!
மலமல என்று இறங்கி
அது மகிழ்ச்சியுடன் ஓடிச்சாம்!
மேலும் கீழும் பார்த்து
அதன் மீசையை பிடித்து இழுத்ததாம்!
வலய வலய வந்து
அதன் வாலைப் பிடித்து இழுத்ததாம்!
கோபம் கொண்டு எழுந்த சிங்கம்
குட்டி எலியைப் பிடித்ததாம்!
கையில் பிடித்த எலியை அது
கடித்து தின்ன பார்த்ததாம்!
கை கூப்பி குட்டி எலியும்
கருணை கருணை என்றதாம்!
மண்டியிட்டு குட்டி எலியும்
மன்னிப்பு என்றதாம்!
பெரிய மனசு பண்ணி சிங்கம்
பிழைத்துப்போ என்றதாம்!
விடுவிடு என்று நடந்த சிங்கம்
வேடன் வலையில் விழுந்ததாம்!
அது கர்ஜித்து அழுத ஓசை
காடு முழுதும் கேட்டதாம்!
எங்கோ கேட்ட குரல் என்று
குட்டி எலியும் வந்ததாம்!
சிங்கம் சிக்கியிருந்த வலையை அது
சின்னாபின்னமாய் கடித்ததாம்!
வெளியில் வந்த சிங்கம் எலியிடம்
நன்றி நன்றி என்றதாம்!
செய்த நன்றி மறவேன் என்று
சின்ன எலியும் சொன்னதாம்!
இது எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்! ஆஷுக்கு முழுதும் கேக்க இன்னும் பொறுமை வரவில்லை! எனக்கும் சரியா மனப்பாடம் ஆக மாட்டேங்குது!
அம்மா இங்கே வா வா, அணிலே அணிலே ஓடி வா, யானை யானை, ... இந்த பாடல்களும் ஆஷுக்கு ரொம்ப பிடிக்கும். மேலே இருக்கும் மூன்றும் அவ்வளவா கேட்டிருக்க மாட்டோம்ன்னு அத மட்டும் எழுதினேன்.(டைப் அடிக்க பொறுமையும் இல்லை!)
மேலும் சில பாடல்களுடன் இதே நேரம், இதே நாள் வேறொரு சமயத்தில் சந்திப்போம். உங்களுக்கு தெரிஞ்ச பாடல்கள் பற்றியும் எழுதவும்.
ps. ரொம்ப நாளா பதிவு ஏதாவது போடணும்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா பிடிச்ச மாதிரி ஒண்ணுமே தோணல. அப்புறம் பிரபு ரொம்ப(!!) கேட்டுக்கிட்டதால தமிழ் ரைம்ஸ் பத்தி எழுதலாம்ன்னு தோணிச்சு. ரொம்ப நன்றி பிரபு ஊக்கம் அளித்ததுக்காக. :)

4 Comments:
Can you find out the old stories, Peru marandhu pona E(housefly), vaal arundhu pona kurango story, paatti paatti kozhukkattaikku mooku undodi and post them as well..
Thank you thank you :D That new humpty dumpty song is really good!
By the way sukkan na enna? I have heard this rhyme a lot, but meaning maRandhu poachu
bonus no deposit free cash -
no deposit bonus poker Good day and luck on table :)
Hello people want to express my satisfaction with this blog very creative and I really like the views of the focus very good indeed Thank you for the helpful information. I hope you keep up the good work on making your blog a success!
Post a Comment
<< Home