Thiravukol

*** The Key to my thoughts in Tamil ***

Name:
Location: Basel, Switzerland

https://www.instagram.com/mail2subha/

Wednesday, March 28, 2007

பொம்மை.

ஆஷுவுக்காக நாலு, அஞ்சு தமிழ் ரைம்ஸ் புக் வாங்கியிருந்தேன். அதுல ஒரு பாட்டு இப்பதான் கண்ணுல பட்டுது. நீங்களே பாருங்க.

பாடல் 21. அம்மா கையில் அப்பா பொம்மை

ஏமா பூமா
எங்கேடி மாமா?
கடைக்குப் போனாரா?

ஆமா மாமா
சாமான் வாங்க
கடைக்குப் போனாரே!

அம்மை அப்பன்
பொம்மை வேண்டும்
வாங்கச் சொன்னாயா?

அம்மா பொம்மை
அப்பா பொம்மை
எதற்க்குக் கடைப்பொம்மை?

யாரடி பொம்மை?
கூறடி உண்மை!
அம்மா பொம்மையா?

அம்மா கையில்
அப்பா பொம்மை
அதுதான் உண்மை!


இது யூகேஜி புத்தகம்னு நினைக்கறேன். 2ன்னு போட்ருக்கு புக்ல. நாலு, அஞ்சு வயசுக் குழந்தைகளுக்கு இது தேவையா? எந்த கேணையனாவது இப்படி எழுதுவானா குழந்தைகளுக்கு? எனக்கு வர்ற கோவத்துக்கு...

மத்த பாடல்கள் எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா எனக்கு இந்த புக்க பார்த்தாலே பத்திக்கிட்டு வருது. இத்தனைக்கும் வாங்கறதுக்கு முன்னாடி ஒரு லுக்கு விட்டுட்டுதான் வாங்கினேன். இன்னொரு புக்ல முதல் பாடலே பிச்சைக்காரன பத்தி. அதுவும் "எச்சில ஒழுக பிச்சைக்காரன் வாசலில் நின்றானே" ன்னு ஆரம்புக்கும். நல்ல வேளை வாங்கறதுக்கு முன்னாடி பார்த்ததால அந்த புக்க அப்படியே கடாசிட்டு வந்துட்டேன். எல்லாம் நேரம்!

ஆங்கில புத்தகமெல்லாம் பார்க்கும்போது பொறாமையா இருக்கு, தமிழ்ல இவ்ளோ நல்லா இல்லையேன்னு. இருக்கற ஒண்ணு, ரெண்டும் இப்படி அறைவேக்காடாவா இருக்கணும்?

பி.கு.
நம்ம வீட்ல நடக்கறததான சொல்லியிருக்கு? உண்மைய சொன்னா உனக்கு பிடிக்காதென்னு ஆஷுவோட அப்பா சொன்னத இங்க யாராவது சொன்னா தெரியும் சேதி! உங்களுக்கு ஸ்பெஷலா பிச்சைக்காரன் புக் பார்சல் அனுப்பப்படும்!

5 Comments:

Anonymous Anonymous said...

Enakku Pichaikkaran book vendam. Adhanaal naan onnum sollalai...

4:04 PM, March 28, 2007  
Blogger காட்டாறு said...

வருத்தம் வேண்டாம் திறவுக்கோல். internet-ல இல்லாதது என்று ஒன்று உண்டோ . பெரியவங்களுக்குஅருமையான தமிழ் புத்தகங்கள், அகராதிகள், மற்றும் பலவும், குழந்தைகளுக்கு மழலைக் கல்வி என்ற அட்டகாச பகுதியும் தமிழ் வர்சுவல் யுனிவர்சிட்டியில் (http://www.tamilvu.org) இருக்கிறது. நான் என் மருமக்களுக்கு (தோழன்/தோழியர் குழந்தைகளுக்கு) தமிழ் கதைகள் இங்கிருந்து தான் திருடுவேன். :)

3:06 AM, March 29, 2007  
Blogger Manchus said...

Wow!! Can't imagine books being written this way.

"Amma Kayil Appa Bommai"...I am sure some maniac would have written this.

How did you start teaching her Tamil alphabets? I would like to teach R someday.

9:49 PM, April 11, 2007  
Anonymous Anonymous said...

ஆங்கில புத்தகமெல்லாம் பார்க்கும்போது பொறாமையா இருக்கு, தமிழ்ல இவ்ளோ நல்லா இல்லையேன்னு.

அப்படி முடிவு பண்ணிடாதிங்க, முதல்ல இதப் படிங்க...
Sugar and spice and everything nice? Not so much...
பி.கு: திறவுகோல் காணாமல் போயிருச்சோன்னு பயந்திட்டு இருந்தேன். :)

7:45 PM, April 29, 2007  
Anonymous Anonymous said...

nessuno forza poker online milan uno desperados
bonus no deposit free cash - no required from извънредно възнаграждение you
no deposit poker bonus for new gambling players darmowe promocje dla każdego
bonus za darmoza darmo bez deponowania kasy ale z bonus pokerem. unikalny poker tekst albo tędy i owędy tuitaj
Poker Party, Titan, Pkr, Mansion, Full Tillt, and many more promotion of poker online.
Bonus for freeLista con i migliori bonus dei poker online - nessuno deposito
Poker Party, Titan, Pkr, Mansion, Full Tillt, and many more promotion of poker online.
bonusy darmowebezproblemowo rejestracja platforma bełkot tutaj, czyli poker , aj co ja pisze
Best gambling bonus free chips Mansion, play game Full Tillt, and many more
извънредно възнаграждение

8:53 PM, May 30, 2009  

Post a Comment

<< Home

free invisible hit counter