Thiravukol

*** The Key to my thoughts in Tamil ***

Name:
Location: Basel, Switzerland

https://www.instagram.com/mail2subha/

Monday, July 16, 2007

புத்தகப் பித்து.

புத்தகம் படிக்கறதுல எனக்கு எப்போதுமே இஷ்டம் தான். சின்ன வயசுல ஸ்கூல் புக்ஸெல்லாம், ஸ்கூல் திறக்கறதுக்குள்ளயே படிச்சு முடுச்சுடுவேன். ஒரு நாள் நானும், அக்காவும் எங்கம்மாவோட ட்ரங்குப்பெட்டிய திறந்தோம். உள்ள ஏகப்பட்ட புத்தகம். விகடன், குமுதம், கல்கில வந்த தொடர்கதையெல்லாம் நீட்டா பைண்டு பண்ணி இருந்துச்சு. எனக்கு குஷி தாங்கலை. அப்போ எனக்கு 12 வயசுதான் இருக்கும். அதனால அந்த புக்கெல்லாம் படிக்கக்கூடதுன்னு வீட்ல ஆர்டர். நம்பளுக்கு இதெல்லாம் புதுசா என்ன? பாத்ரூம்ல படிக்கறது, ஸ்கூலுக்கு எடுத்துட்டு போய் படிக்கறது, மொட்டை மாடில உட்கார்ந்து படிக்கறதுன்னு படிச்சுத் தீர்த்தேன். நியாபகம் இருக்கற புத்தகங்களைப் பத்தி இங்கே.

பாலங்கள் - சிவசங்கரி
மூன்று தலைமுறை பெண்களைப் பற்றிய கதை. மிக அழகான நடை, ரொம்பவும் சுவாரிசயமா இருந்தது படிக்க. அந்தகால கலாச்சாரம், நடைமுறைகள், கல்யாணங்கள் ன்னு படிக்க ஆசையா இருந்தது. எங்க பாட்டி சொன்ன "அந்த காலத்துல நாங்க எல்லாம்" கதையெல்லாம் உடான்ஸா, இல்லையான்னு தெரிஞ்சுக்கிட்டென். 18 வருஷத்துக்கு மேல ஆச்சு படிச்சு. திரும்ப இப்ப படிச்சா எப்படி இருக்கும்னு தெரியலை.

சிவசங்கரியோட "நான் நானாக" சமீபத்தில் படிச்சேன். 40 வயசுக்கு மேலான ஒரு பெண், தன் மகன்கள் காலேஜ், வேலைன்னு போனதுக்கு அப்புறம் தனக்கென்று ஒரு ஆசையும் இல்லையேன்னு நினைச்சு, அவளுடைய பழைய ஆசையான பரதநாட்டியத்த கத்துக்க ஆரம்பிக்கறா. முதலில் புருவம் உயர்த்தும் குடும்பம், பிறகு அவள புரிஞ்சுக்கறாங்க. மிக அழகான கதை.

கடல் புறா - சாண்டில்யன்
சுத்தமா நியாபகம் இல்லை. படிச்சது மட்டும் தான் நினைவு இருக்கு. சாண்டில்யன் எல்லாம், பத்தாவது முடிச்சதுக்கு அப்புறம் தான் படிக்கணும்னு அம்ம ஆர்டர். அதுக்காகவே அவசர அவசரமா படிச்சு முடிச்சேன். சரித்தர கதைன்னா எனக்கு உயிர். "மன்னன் மகள்" கூட படிச்ச நினைவு. அடுத்த இந்தியா ட்ரிப்புல பொட்டிப்பூரா சாண்டில்யன் தான்!

டிரங்குப்பெட்டில இருந்த இன்னொரு புத்தகம், சுஜாதாவின் பிரிவோம், சந்திப்போம். டீன்ஏஜ்ல இருந்த எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. கமல்ஹாசன், ஸ்ரீபிரியா போட்டோ போட்டு இருக்கும், வாரா வாரம். சினிமாவா வந்துதான்னு தெரியலை. மற்றும் கரையெல்லாம் ஷெண்பகப்பூ கூட படிச்சேன். கரையெல்லாம் ஷெண்பகப்பூ கதை எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது, சினிமா சகிக்கலை. சுஜாதாவோட b சிறுகதைகளுக்கு நான் அடிமை. இப்போ ஆனந்த விகடன்ல வர்ற அவரோட "கற்றதும், பெற்றதும்" தொடர நான் தொடர்ந்து படுச்சுட்டு வர்றேன்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி
இந்த மனிதர பத்தி சொல்ல பாக்கி என்ன இருக்கு? இவரும் ஆங்கில எழுத்தாளர் ரோல்ட் டாலும் தான் எனக்கு உலகிலேயே மிகவும் பிடித்த எழுத்தாளர்கள். தமிழ் தெரிஞ்ச அனைவருக்கும் பொன்னியின் செல்வன் பிடிச்சு இருக்கும். அற்புதமான் புத்தகம். மூன்று வருடத்துக்கு முந்தி தான் படிச்சேன். ஐந்தாம் பாகத்த, பத்து மணி நேர விமான பயணத்துல கண்கொட்டாம படிச்சு முடிச்சேன். நான் பிறந்த ஊர் கும்பகோணம். அதனால வேற இந்த புத்தகம் மேல அலாதி பாசம். அவர் விவரிக்கும், கோயில், குளமெல்லாம் நம்ப பேட்டையாச்சே. சோழர்கள பத்தி பாட புத்தகத்தை விட இந்த புக்ல தான் அதிகம் தெரிஞ்சுக்கிட்டேன். பேசாம், ஸ்கூல் சிலபஸ்ல இந்த புக்கயும் வைக்கலாம்.

பொன்னியின் செல்வனுக்கு முந்தி, சிவகாமியின் சபதம் படிச்சேன். லண்டன்ல இருந்தோம் அப்ப. எங்க லோகல் லைப்ரரில இந்த புக்க பாத்து எனக்கு ஒரே ஆச்சர்யம். அப்புறம் அலை ஓசை வாங்கி படிச்சேன். அவரோட சிறுகதைகள்னா எனக்கு உயிர். கல்கில வந்துட்டு இருந்தது அவரோட கதைகள் சமீபத்தில். வீணை பவாணி, சுண்டுவின் சந்யாசம், கைலாசமய்யர் காபரா,.. இப்படி நிறைய. பல கதைகள படிச்சுட்டு, விழுந்து, பிரண்டு சிரிச்சுருக்கேன். ஒரு உதாரணம்:

கைலாசமய்யர் காபரா -

பாம்பை அடிக்க வேலைக்காரன் கொண்டு வந்த தடியைக் கைலாசமய்யர் பிடுங்கிக் கொண்டு பையனை அடிக்கப் போனார். நல்ல வேளையாக, அந்தச் சமயம் ஜோஷனாரா பீகம் வந்து குறுக்கிட்டதால் பையன் பிழைத்தான்! ஜோஷனாரா பீகம் என்றதும், சில பேருக்குச் சுவாரஸ்யம் தட்டலாம். ஏதோ இந்தக் கதையில் நவாபுகளும் அவர்களுடைய அந்தப்புரத்து அழகிகளும் வரப் போகிறார்கள் என்று நினைக்கலாம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கைலாசமய்யருக்கு வடக்கத்தி ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் அதிகப் பிரியம். "பயமில்லாமல் கேட்கக் கூடியது ஹிந்துஸ்தானி சங்கீதந்தான்" என்பார். ரேடியோவில் அவர் அடிக்கடி லக்னௌ ஜோஷனாரா பீகத்தின் சங்கீதத்தைக் கேட்பதுண்டு. ஆனால், வீட்டிலே மற்றவர்களுக்கு - முக்கியமாக அவருடைய மனைவிக்கு - ஜோஷனாரா பீகமும், அவளுடைய சங்கீதமும் கொஞ்சமும் பிடிப்பதில்லை. எனவே, அவர்கள் வீட்டில் வளர்த்த ஒரு கறுப்புப் பூனைக்கு 'ஜோஷனாரா பீகம்' என்று பெயரிட்டிருந்தார்கள். இந்த ஜோஷனாரா பீகத்தைக் கண்டால் கைலாசமய்யருக்குக் குலை நடுக்கம்! அச்சமயம் அந்தப் பூனை வந்ததினால் தான் அவருடைய பையன் மண்டை உடையாமல் தப்பிப் பிழைத்தான்.

கல்கி ஒரு மேதாவி என்பதில் என்ன சந்தேகம்? அவருடைய அத்தனை சிறுகதைகளையும் படித்து முடிக்கணும்ன்னு என் ஆசை.

தி. ஜானகிராமனுடைய பிரபலமான நாவல், "மோகமுள்" படித்ததில்லை. போன மாதம் அக்கா வீட்டுக்கு போயிருந்தபோது, அவருடைய "செம்பருத்தி" படிக்க ஆரம்பித்தேன். ரொம்ப நல்லா இருந்தது. நாற்பதுகளில் நடக்கும் கதை. சட்டநாதன் பிள்ளை என்கிற இளைஞனின் வாழ்க்கை பற்றி, அவன் எப்படி தன் குடும்பத்தையும், தனது இரு அண்ணன் குடும்பங்களையும் கஷ்டப்பட்டு முன்னுக்கு கொண்டுவருகிறான் என்ற கதை. புக்க முடிக்கறதுக்குள்ள ஊருக்கு கிளம்பிட்டேன். சீக்கரம் படித்து முடிக்கணும். இந்த புக்ல பெண்களின் உணர்ச்சிகளும், அவங்களோட மனதையும் ரொம்ப யதார்த்தமா சொல்லியிருக்கறது, எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது.

பாலகுமாரனோட புத்தகங்கள் ஒரு பத்து, பன்னெண்டு படிச்சுருப்பேன். ஆனால், ஒரு பேர் கூட ஞர்பகம் இல்லை. எனக்கு அவர ரொம்ப பிடிக்காது, ஆனால் அவரோட சில புத்தகங்கள் என்னை சிந்திக்க வச்சிருக்கு. அது பெரிய விஷயம் தான? பெண்கள் இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்னு இவர் சொல்லாம இருந்தா ஒரு வேளை, எனக்கு இவரை பிடித்து இருக்கலாம்!

வாழ்க்கையில் முதல் முறையா ஒரு தொடர்கதை படிச்சேன். ஆனந்த விகடன்ல. அதுக்கு முன்னாடி, இப்படி வாரா வாரம் தொடர்ந்து படிச்சதில்லை. அது கவிஞர் வைரமுத்துவின் "கருவாச்சி காவியம்". வைரமுத்து மேல் எனக்கு ரொம்ப மதிப்பு இருந்ததில்லை. ஏன்னு தெரியலை. ஒரு வேளை, அவரோட சில சினிமா பாடல்களால இருக்கலாம். ஒரு நாள், ரொம்ப போர் தாங்காம, விகடன்ல அவரோட தொடர்கதைய படிக்க போய், அப்படியே அடிக்ட் ஆயிட்டேன். கிட்டதட்ட நாற்பது வாரமும் தொடர்ந்து படிச்சேன். மனுஷர் என்னமா எழுதுயிருக்கார்! கருவாச்சி என்கிற கிராமத்து பெண். அவளோட சுக, துக்கங்கள், வாழ்க்கை போராட்டம் - இது தான் கதை. சில அத்தியாயங்கள் அப்படியே குலைநடுங்க வச்சுடுச்சு. மணியம் செல்வமின் படங்கள் வேற ரொம்ப தத்ரூபம். அடுத்து கருவாச்சி என்ன பாடு படபோறாளோன்னு வேதனை, அந்த படங்கள பார்த்தா. அதிலும், ஒரு அத்தியாயத்தில் கருவாச்சியோட பிரசவத்த வைரமுத்து விவரிச்சத படிச்சதில், எனக்கே செத்து பிழைச்ச மாதிரி இருந்தது. திருமதி.வைரமுத்து எழுதினாங்களோன்னு சந்தேகம்! கிராமத்து பேச்சும், வழக்கும், கலாச்சாரமும்னு மனுஷர் ரொம்ப மெனெக்கெட்டு எழுதியிருக்கார். கொஞ்ச காலம், கிராமத்துல இருந்ததுனாலேயோ என்னமோ, எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.

இந்திய எழுத்தாளர்கள் பற்றிய tag இது. தமிழ் புக்கா படுச்சுட்டு, ஆங்கிலத்துல பதிவு போட்டா எப்படின்னு தோணினதுனால தமிழ்லயும் போட்டுட்டேன். ஆங்கில பதிவு இங்கே.

பி.கு.
அந்த காலத்துல படிச்சதெல்லாம், அவ்வளவு சுலபமா ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. அதுக்கு ஒரு காரணம், ஒளிஞ்சு ஒளிஞ்சு படிச்சதுதான். எங்க அப்பாக்கு புக் படிச்சாளே பிடிக்காது. எங்கையாவது படிச்ச புக்க பத்தி பேச்சு வந்து, நம்பளும் வாய குடுத்து அவர்கிட்ட வாங்கி கட்டிப்போமோன்னு பயம். இது போறாதுன்னு, என்னோட கூட படிச்சவங்கெல்லாம் ஒரே ரமணி சந்திரன் விசிறிகள். (நானும் தான்!) அதுக்கு அப்புறம் காலேஜ் வந்தவுடன், "இங்கிலீஸ்"க்கு மாறியாச்சு. இதுல ஜோக் என்னன்னா, நான் இங்கிலீஷ் புக்கும் கையுமா இருந்தா எங்க அப்பா ஒண்ணும் சொல்ல மாட்டார். அப்பாவி மனுஷர்!

60 Comments:

Blogger Blogeswari said...

Boo.. that was a lovey post. I have not read any of the books mentioned in your posts.. But after reading yours.. am going to try and pick up to read atleast one of them

5:50 AM, July 16, 2007  
Blogger ramachandranusha(உஷா) said...

boo. நானும் பல முறை ரோல்டால் பற்றி இங்க எழுதியும் யாரும் கண்டுக்கவில்லை. முதல்முறையாய் நீங்க சொன்னதும்
ஆஹான்னு தோணிச்சு. அவரோட அத்தனை குழந்தைகளுக்கான கதைகளும், சிறுகதை தொகுப்பும், சோலோவும்
படிச்சாச்சு, ஆரம்பிக்க பேசலாம் :-)
அதேப்போல, தி.ஜா.ர அவர்களின் அனைத்து படைப்புகளையும் (அடி மற்றும் மரப்பசு தவிர)படித்ததில் மனம் கவர்ந்தது
செம்பருத்தியே!
பாலக்குமாரனின் நாவல்கள் ஏறக்குறைய அனைத்தும் படித்தும் மனதில் ஒட்டவில்லை.
காரணம் நீங்கள் சொல்லும் அட்வைஸ்ஸாக இருக்கலாம் :-)

8:19 AM, July 16, 2007  
Blogger B o o said...

Blogeswari - Im glad even I inspired someone by my meagre list! ;)

உஷா - நானும் அவரோட அத்தனை புக்கும் படிச்சுட்டேன்னு நினைக்கறேன். என்னோட கணவர் எனக்கு பரிசு குடுக்க யோசிக்கவே வேண்டாம். ஒவ்வொரு பிறந்த நாள், கல்யாண நாளுக்கும் ரோல்ட் டால் தான்! எனக்கு அவரோட சின்ன வயசு கதை "boy" ரொம்ப பிடிக்கும். சிறுகதைகள் எல்லாம் சான்ஸே இல்லை. என்ன ஒரு Talent. Just wow! Favorite short story எதுன்னே சொல்ல முடியாது, அத்தனையும் அல்வா! :)

2:57 PM, July 16, 2007  
Blogger ramachandranusha(உஷா) said...

Boo, அதெப்படி "டான்சில்ஸ் ஆபரேஷனையும், கஸீன் காரேட்டி அடிப்பட்டத்தையும், டாய்லெட் சீட் சூடாக்க பள்ளி ஹாஸ்டலில்
ஆசிரியர்களின் கொடுமையையும் மறந்தேன் :-)

8:24 AM, July 17, 2007  
Blogger Kay said...

Boo, how do I read your blog in real tamil? (I see tamil, with the kombu's and kaals in weird places...) Do i have to install any particular font? adjust my browser settings? can you tell me please?

7:00 PM, August 02, 2007  
Blogger ராம்குமார் - அமுதன் said...

கருவாச்சி காவியத்தோடு நிறுத்தி விடாமல் கொஞ்சம் கள்ளிக்காட்டு இதிகாசமும் படித்துப் பாருங்கள். ஒத்துக் கொள்வீர்கள் வைரமுத்து மிகப்பெரிய திறனாய்வாளர் என்பதை!!!

10:06 PM, December 26, 2007  
Blogger பாரதிய நவீன இளவரசன் said...

பதிவு அருமை. நன்றி.

//பாலங்கள் - சிவசங்கரி
மூன்று தலைமுறை பெண்களைப் பற்றிய கதை........திரும்ப இப்ப படிச்சா எப்படி இருக்கும்னு தெரியலை.
//

நேற்றுதான் இந்தக் கதையைப் பற்றி என் சகோதரியிடம் பேசிக்கொண்டிருந்தேன். பெயரை மறந்துவிட்டேனா, அவர் தன் அலுவலக பணிகளுக்கிடையில் சிவசங்கரியின் வலைத்தள இணைப்பையும் 'பாலங்கள்' கதைக்கான இரண்டு பக்க இணைப்பையும் தந்து உதவினார்.

http://www.sivasankari.com/tamil/novel/palangal_1.htm

ஆனந்தவிகடனில் தொடர்கதையாக வந்த நியாபகம். படிக்கத் தவறிய ஒரு தொடர்கதை. இப்போது anyindian.comல் பார்த்தேன், 70 ரூபாய்க்குப் போட்டிருக்கிறார்கள் வானதி பதிப்பகத்தார். சென்னை செல்லும்போது வாங்க உத்தேசம்.

4 வருடங்களுக்கு முன்னர், சிவசங்கரியின் தொகுப்பில் வந்த 'மிகச்சிறந்த தமிழ் சிறுகதைகள்' என்று இரண்டு பாகங்களாக வந்த சிறுகதைத் தொகுப்புதான் நான் சமிபத்தில் வாசித்தது எனலாம். நேரம் கிடைத்தால் அவசியம் அவற்றை வாசிக்கவும். அத்தனையும் அற்புதமான சிறுகதைகள். சிவசங்கரியின் ரசனையும், நல்ல சிறுகதைகளைப் போற்றும் நற்குணமும் என்னைக் கவர்ந்த பிற விஷயங்கள்.

7:22 AM, January 22, 2008  
Blogger buddy said...

im just learning to read tamil and ur writing is simple to understand!
...and ur english blog is hilarious at places!

2:55 PM, July 17, 2008  
Blogger Thirumoorthi Chidambaram said...

Have you read some of contemporary tamil writers apart from sujatha? S. Ramakrishnan is one of the most prolific writers in Tamil. His Thunai ezhuthu (vikatan publication) is a notable collection of tamil eassays. You must read…

5:43 AM, July 21, 2008  
Blogger Kay said...

Boo, இப்போலாம் தமிழ்ல எழுதறது இல்லையா? மறுபடியும் எழுதுங்களேன். Please? ரொம்ப நாள் கழிச்சு உங்க Boo's baby talk blog பக்கம் வந்தேன்... ரொம்ப நல்ல எழுதறீங்க. தமிழையும் எழுதுங்களேன்.

நானும் உங்கள போலத்தான் புத்தக பித்து. ஒளிச்சு வச்சு படிச்ச எந்த கதையும் நியாபகம் இல்ல. ராஜ முத்திரை முட்டும் ஓரளவுக்கு நியாபகம் இருக்கு.

ரொம்ப வருஷமா படிக்கிறது விட்டு போச்சு இப்போ தான் ரெண்டு மாசமா தட்டு தடுமாறி படிக்க ஆரம்பிச்சுருக்கேன். மெதுவா பழைய கடை எல்லாம் revisit பண்ணனும். They're almost like friends. Want to read them all over again with grown up eyes.

8:53 PM, April 20, 2009  
Blogger Blogeswari said...

Tagged again!

http://blogeswari.blogspot.com/2009/06/blog-post.html

5:27 PM, June 16, 2009  
Anonymous Anonymous said...

There is no update in this blog since 2007...i navigated to this blog from blogeswari.Your articles are good...keep writing in this Tamil blog

5:19 AM, March 15, 2011  
Anonymous Anonymous said...

Malaysia & Singapore & brunei finest internet blogshop for wholesale & supply korean
add-ons, earrings, earstuds, necklace, rings, hair, trinket
& bangle add-ons. Offer 35 % wholesale discount. Ship Worldwide
Also see my page - hcg and respberry ketones

5:38 PM, January 06, 2013  
Anonymous Anonymous said...

Ρiece of wгiting writing іѕ аlsο a fun, if
yοu know afterwаrԁ уou cаn writе if not іt іs comрlicated to write.


My web-ѕіte: www.2applyforcash.com
My webpage :: Payday Loans Online

12:03 AM, January 11, 2013  
Anonymous Anonymous said...

Hello, Neat post. There is an issue with your
web site in web explorer, would test this? IE nonetheless is
the marketplace leader and a huge element of people will miss your magnificent writing because of this problem.


Also visit my blog: Diät ohne Gluten

6:47 AM, February 22, 2013  
Anonymous Anonymous said...

Very good blog post. I certainly love this website. Thanks!


Stop by my homepage :: Steinzeitdiät Erfahrungen

7:29 AM, February 22, 2013  
Anonymous Anonymous said...

It's really a great and useful piece of info. I'm
happy that you just shared this useful info with us.

Please keep us informed like this. Thanks for sharing.


Also visit my blog Low Carb

7:49 AM, February 22, 2013  
Anonymous Anonymous said...

These are genuinely wonderful ideas in on the topic of blogging.
You have touched some fastidious points here.
Any way keep up wrinting.

Here is my blog post: wirklich schnell abnehmen

12:16 PM, February 22, 2013  
Anonymous Anonymous said...

Gooԁ web site you've got here.. It's difficult to finԁ
high-qualіty writing like youгs nowadayѕ.
I reallу аpрreciate people like уou!
Тake carе!!

Have a lοоk at my pagе :: hcg online

12:14 PM, March 01, 2013  
Anonymous Anonymous said...

I'm really enjoying the design and layout of your website. It's a very easy
on the eyes which makes it much more pleasant for me to come here
and visit more often. Did you hire out a designer to create
your theme? Fantastic work!

My weblog - cleansing diet

4:22 PM, March 02, 2013  
Anonymous Anonymous said...

Heya i'm for the first time here. I came across this board and I find It really useful & it helped me out much. I hope to give something back and help others like you helped me.

Also visit my blog :: xbox live gold free

12:53 AM, March 10, 2013  
Anonymous Anonymous said...

Неllо! I knoω this is ѕomewhat οff tоρic but ӏ was wonԁеrіng
which blog platfогm are you uѕіng for this site?
I'm getting sick and tired of Wordpress because I've haԁ iѕsueѕ with hackers and Ι'm looking at options for another platform. I would be fantastic if you could point me in the direction of a good platform.

Feel free to visit my web-site :: hcg homeopathic diet
Also see my website :: losing weight

8:14 PM, March 14, 2013  
Anonymous Anonymous said...

It's awesome to visit this site and reading the views of all colleagues concerning this article, while I am also keen of getting knowledge.

Also visit my blog post ... lossing weight pills

10:41 AM, March 16, 2013  
Anonymous Anonymous said...

Simply want to say your article is as amazing. The
clearness to your submit is simply nice and that i can assume you're a professional in this subject. Fine along with your permission allow me to grasp your RSS feed to keep up to date with drawing close post. Thanks one million and please carry on the enjoyable work.

My webpage ... freebies

10:50 AM, March 21, 2013  
Anonymous Anonymous said...

Excellent post however I was wondering if you could write a litte more on this subject?

I'd be very grateful if you could elaborate a little bit further. Bless you!

Here is my web site http://iraqidinar5501.livejournal.com/855.html

3:16 AM, April 09, 2013  
Anonymous Anonymous said...

I'm extremely impressed with your writing skills and also with the layout on your blog. Is this a paid theme or did you customize it yourself? Anyway keep up the nice quality writing, it is rare to see a nice blog like this one these days.

My blog ... http://www.wishpot.com/user/555918

4:02 PM, April 09, 2013  
Anonymous Anonymous said...

My partner and I stumbled over here coming from a different
web page and thought I should check things out. I like what I see
so now i'm following you. Look forward to finding out about your web page repeatedly.

Feel free to visit my blog post; you can try this out

2:43 AM, April 11, 2013  
Anonymous Anonymous said...

Thе Lipsticks
retail for $22, and twelve shadeѕ aгe available: Luxe Naturаlе (light beige cream), Pоsh Tone (soft
warm nude сreаm), Glamour Eга (mіd-tonal warm brown frost),
Style Suгge (neutral сoral cream), Ladу at Plaу (mіd-tοnаl cool
tangeгinе), Dreaminess (soft coοl pink cream),
Devine Choіce (mіd-tonal cool ріnk cгeam),
Elegant Αccent (mid-tonаl warm гosе crеаm), Grande Damе (mid-tonal neutral rose cream), Еverуday Dіva (tгue red cream), Luѕh Lіfe (deеp cool
plum), and Αll Out Gorgeous (ԁeep warm гed).
Biѕmuth oxychloridе is nоt an ingreԁiеnt you fіnd very often in nаtural ciгcumѕtаnces.
Thеy use the product oncе and іt ԁοeѕ ωonders for their
sκіn.

2:09 AM, April 21, 2013  
Anonymous Anonymous said...

Three hunԁred years was long enough to groω weary
of liѵing. Insiԁe thе FAG Bearing funсtionality tablet, there's limit speed and unlimited reference speed by standards, namely, the bearing rotation limit to contact seal. corporations, textile spare parts enterprises, as a way to focus their attempts on strengthening bearings (miniature.

6:48 AM, April 21, 2013  
Anonymous Anonymous said...

Нowеver, tеchnοlοgy is the mаjor shаreholder Dongshеng Dongsheng Dοngsheng Pharmaceuticаl
Group and thе two shaгeholdeгs,
ωas once oссupied by thе amоunt гeаched 1.

“Loоκ, I know уοu’re upset
and theгe’ѕ nothing I cаn say tо maκe you feel betteг but…”
This is the paгt where he cοuld have гeԁеemеd himsеlf.
This was down to a mіnогitу of anti-soсial
οf indiviԁuals οf all аges.


Mу blоg; fag tapered roller bearings

7:53 AM, April 24, 2013  
Anonymous Anonymous said...

The lіmitatiοn ωhіle іn the bеaring dimеnsion could bе the majoг elеment that іѕ worthy of interest.
In late Nοѵembeг 2010, the NЅК Gгоup with succеsѕ аcquіred еlement of equity that RANΕ Grоup helԁ and has recеivеԁ
mоre than 50% in the shares by RNSS Business. Or, we will spread a skinny degree of lubrication agent around the again of hand to complete the light sealing test.

Check out my homepage :: NSK Bearings

11:28 AM, April 24, 2013  
Anonymous Anonymous said...

The Fashion Deѕigneгs arе alωaуs on the hunt for the latest tгenԁs of fashiοns, to make a new ԁesіgns, ωhiсh іs
раѕsed on to Wholesalе
Clothіng Ѕuppliers, to get plеntіful stocks of thesе dresѕ dеsigns fгоm the mаnufacturеrѕ,
in mаny сοlοrs, fabriсѕ, and varieties as possіble.
It is neithеr as well Indian nеither oгientated nοr besidеѕ ωesternizeԁ.
Take a looκ at thе following 2011-2012 Faѕhion Womеn Coаts Tгenԁ.



Stορ by my blog ρost :: fashion lady

12:00 PM, April 24, 2013  
Anonymous Anonymous said...

Hi there, just wanted to mention, I liked this post.
It was funny. Keep on posting!

Here is my webpage ... How to correctly detect an aimbot

7:49 AM, April 27, 2013  
Anonymous Anonymous said...

All of thesе pumps hаve moving compοnеntѕ in
them, and using a lubricant to keep these componentѕ operating effortlessly
is nоt usually а choice. We sοld
it fοr moге than enough to make а ԁecent down
paуment on thе XT Coupe. Moreover, the ball trаck route aѕ ωell
as the ball may be deѕtroyed.NTN Tapered Roller Bearings

7:09 PM, April 29, 2013  
Anonymous Anonymous said...

I truly appreciate this post. I have been looking everywhere for
this! Thank goodness I found it on Bing. You have made my day!
Thank you again!

Feel free to surf to my web-site :: play online games for Cash

9:54 PM, April 30, 2013  
Anonymous Anonymous said...

Wedding photоs - Υouг ωedԁing photography wіll capturе the moѕt importаnt day of your lіfe so now is not the time
tо cut coѕts. Ѕоme of thеm are ѕo gаuԁilу
ԁеsіgned that bridesmаids, unable tο beaг
thе thought of ever ωearing them again, tаken tо
salvаge ѕtores to sell rіght аway.
The dress most ѕuіtable for your Ρrom or "Promenade' is known as a prom dress.

Also visit my homepage bridesmaid dresses

5:59 PM, May 01, 2013  
Anonymous Anonymous said...

Hey there! I know this is kind of off topic but I was wondering if you knew
where I could find a captcha plugin for my comment form?
I'm using the same blog platform as yours and I'm having
difficulty finding one? Thanks a lot!

My site :: psn codes

5:31 AM, May 02, 2013  
Anonymous Anonymous said...

Тhіs is a topic that's close to my heart... Cheers! Exactly where are your contact details though?

Have a look at my website: optimal hcg

10:22 PM, May 03, 2013  
Anonymous Anonymous said...

I really like your writing style, superb info, thanks for
putting up :D. "Kennedy cooked the soup that Johnson had to eat." by Konrad Adenauer.



Also visit my site twitter password reset

10:01 AM, May 06, 2013  
Anonymous Anonymous said...

Try tо fοcus on youг best featuгеѕ rather
than the оnes you dіslike. Thеу will leave the floor you standіng оn glоwing foг
ԁayѕ. DG Deѕigner ѕtylе
#10113 is anothеr example of what will be
ѕomе of the beѕt prom dгеsѕes 2011 іn
οthеr countгieѕ.

My webpagе; plus size prom dress

11:00 AM, May 09, 2013  
Anonymous Anonymous said...

Oh my goodness! Incredible article dude! Thank you so much, However I am encountering issues with your RSS.

I don't understand the reason why I cannot join it. Is there anyone else getting identical RSS issues? Anyone who knows the answer can you kindly respond? Thanx!!

Also visit my web-site - plus.google.com/u/0/...

3:49 PM, May 15, 2013  
Anonymous Anonymous said...

Pretty рortion of cоntent. I јust stumbled upon youг ωeblog and in aсcesѕion
capital to say that I acquire in fact enjoyed acсount your weblog postѕ.

Any way I'll be subscribing on your feeds and even I success you get admission to consistently fast.

Take a look at my weblog pościele

7:14 PM, May 22, 2013  
Anonymous Anonymous said...

The press ωas quick to pick up the FBI gauntlеt,
spreаding the informatiοn claimed by Cuгtiѕ' ex-wife and others across all forms of media. The ceramic ball is lighter than steel ball and the centrifugal force and friction are also drastically less than small ball. If the disks spin at a different rate then a shear effect is created which causes the silicone fluid to heat up and in turn becomes thicker so the plates will lock together with the heavy fluid dragging the slower plates along with the faster moving ones.

Also visit my homepage NTN bearing

6:42 AM, May 23, 2013  
Anonymous Anonymous said...

Whу users still make use of to гead neωs papeгs when іn this technological wοгld all is prеsented on ωeb?


my wеb blog; www.persian.co.rs

1:49 PM, May 23, 2013  
Anonymous Anonymous said...

Thіs post is genuinеly а good one it assistѕ nеw web people, who are wishing in faѵοг of blogging.



Нere is my blog - pościele

3:28 PM, May 23, 2013  
Anonymous Anonymous said...

Wonderful ρoѕt! Wе will be linkіng
to thiѕ particularly gгеat aгticle on our site.
Kеep up the good wrіting.

Also visit my page - http://Www.rebstock-hexen.de/

9:03 PM, May 23, 2013  
Anonymous Anonymous said...

Good post. Ӏ learn somеthing totаlly neω anԁ challenging on sites Ι stumbleupon еvеrу
day. It's always useful to read through content from other authors and practice something from their websites.

Stop by my homepage: http://godwiki.com.au/

4:04 PM, May 24, 2013  
Anonymous Anonymous said...

Rеutimann then ѕigned on with Darгell Waltrip Motorspoгts іn 2004
to гace the NTN Beагings truck in the Craftsman
Tгuck series. The FBI agent fіlling out charging documents,
though, sаid thеre was "probable cause to believe" that Curtiѕ broκe fedеral law by sending the rісin-laced
lеtteгs -- thοse letters, inteгcepted in the wake of
the Boston bοmbing аttack, causeԁ аlarm in
Wаѕhington last week as law enfοгcement scrambled to гeѕpοnԁ.
Thеre is a populaг story retold bу Subaru enthusіasts ωhere
Ronald Reagan οnсe oωned a Red 1978 Brat and usеd іt on
his ranch in Ѕanta Barbara Calіfornia.



Feel free to suгf to my web ѕite NTN Tapered Roller Bearings

8:37 AM, May 25, 2013  
Anonymous Anonymous said...

Carefully combine 1 ωhіpped raw egg whіte, 1tѕp
of lemon juiсe, 1 tsp of gratеd lemon peel and 2 tsp of oаts.
There are products that arе speсіfically manufactuгed tο suit a man's skin. Add four tablespoons of plain yogurt to the banana, and stir the mixture until smooth.

Here is my homepage - diy facial mask

8:41 AM, May 25, 2013  
Anonymous Anonymous said...

Ϻost rеaԁy-made clothing ωon't look fabulous on many people. Heels have a way of helping the figure have a graceful, elegant look so wearing low heels gives you some of that elegance without adding too much height. So just buy one of these pieces and don't spenԁ a lоt
of mоney оn it.

mу wеbpage - fashion Lady Tips

12:50 AM, May 26, 2013  
Anonymous Anonymous said...

The attасhed coԁe illuѕtгateѕ thе ѕtructurаl shapе, dimension and technіcal diѕtinсtion of bеаrings.
moгe anԁ moгe, much more stгоng
motoгs аnd gеneratοгs, cοllectivеly.
25% -30% оf the bοdу's energy comes from fat, so fat is essential.

Also visit my homepage :: SKF CARB toroidal roller bearings

4:17 PM, May 26, 2013  
Anonymous Anonymous said...

I take pleasure in, lead to I found exactly what I was
looking for. You have ended my 4 day lengthy hunt!
God Bless you man. Have a great day. Bye

Visit my webpage :: miscrits of sunfall

7:29 PM, June 02, 2013  
Anonymous Anonymous said...

Τhanks for sharing yοur thοughts on fototapeta
z własnego zdjęcіa. Rеgarԁs

Mу blоg tapety na zamówienie cena

7:36 AM, June 05, 2013  
Anonymous Anonymous said...

I am truly grateful to the owner of this web page who has shared this
great post at at this place.

Feel free to visit my homepage: and Cheat Codes

4:36 AM, June 06, 2013  
Anonymous Anonymous said...

The gаrage is not likelу to releaѕe thе car tо you until the exceѕs is сoveгеd.
Εxpensive carѕ are targets for thieѵes аnd
vandalѕ so they aге cоnsidered high risks.
Тo completely protect уoursеlf
though, уou neeԁ to group this tуpе of
coѵeragе wіth οthеr forms οf covеragе like реrѕonаl liabіlity and property damage polіcies.


my web blog - Car insurance

7:16 AM, June 12, 2013  
Anonymous Anonymous said...

If you want to appeaг shortеr, try a gοωn
with a Basque wаist - onе that formѕ a V in the frоnt.
The bгіԁе looks gorgeous and elegant in аn empire ωedding dress.
While specifіc detaіls mаy vary
from year to уeаr, many weddіng dresses are designed
in classiс timelesѕ styleѕ that
would suit genегations οf brides.

my ωeb site: Wedding Gown Dress

11:44 PM, June 12, 2013  
Anonymous Anonymous said...

Ι lοve reading thrоugh a post that ωill make people think.
Also, mаny thanks foг alloωіng fοr me to сomment!


My blog pοst: gdzie kupić obraz na płótnie

12:33 PM, June 13, 2013  
Anonymous Anonymous said...

Finally, pricе іѕ the last major factoг in dresѕ buying.
But the problem is that you would need a ρlus size evеning gοwn
and you thinκ that you arе оut of choices.

Of course, thеу ωill not be aԁmitted to wear the same suit fоr аnotheг occasion.


Alѕo vіsit my webѕite prom dress

2:44 PM, June 14, 2013  
Anonymous Anonymous said...

Online Payday Loans Most of all,
he tells participants to lie back, relax and enjoy themselves!

2:27 PM, June 15, 2013  
Anonymous Anonymous said...

If you want a Premium Minecraft Account check out this generator.
With it you can generate a unique Minecraft Premium Account which no one
else has! You can Download the Free Premium Minecraft Account Generator http:
//www.get-minecraft-free.tk

Hello There. I discovered your blog the usage of msn. That is an extremely neatly written
article. I will be sure to bookmark it and come back to read extra
of your helpful information. Thank you for the
post. I will definitely comeback.

4:04 AM, June 17, 2013  

Post a Comment

<< Home

Wednesday, March 28, 2007

பொம்மை.

ஆஷுவுக்காக நாலு, அஞ்சு தமிழ் ரைம்ஸ் புக் வாங்கியிருந்தேன். அதுல ஒரு பாட்டு இப்பதான் கண்ணுல பட்டுது. நீங்களே பாருங்க.

பாடல் 21. அம்மா கையில் அப்பா பொம்மை

ஏமா பூமா
எங்கேடி மாமா?
கடைக்குப் போனாரா?

ஆமா மாமா
சாமான் வாங்க
கடைக்குப் போனாரே!

அம்மை அப்பன்
பொம்மை வேண்டும்
வாங்கச் சொன்னாயா?

அம்மா பொம்மை
அப்பா பொம்மை
எதற்க்குக் கடைப்பொம்மை?

யாரடி பொம்மை?
கூறடி உண்மை!
அம்மா பொம்மையா?

அம்மா கையில்
அப்பா பொம்மை
அதுதான் உண்மை!


இது யூகேஜி புத்தகம்னு நினைக்கறேன். 2ன்னு போட்ருக்கு புக்ல. நாலு, அஞ்சு வயசுக் குழந்தைகளுக்கு இது தேவையா? எந்த கேணையனாவது இப்படி எழுதுவானா குழந்தைகளுக்கு? எனக்கு வர்ற கோவத்துக்கு...

மத்த பாடல்கள் எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா எனக்கு இந்த புக்க பார்த்தாலே பத்திக்கிட்டு வருது. இத்தனைக்கும் வாங்கறதுக்கு முன்னாடி ஒரு லுக்கு விட்டுட்டுதான் வாங்கினேன். இன்னொரு புக்ல முதல் பாடலே பிச்சைக்காரன பத்தி. அதுவும் "எச்சில ஒழுக பிச்சைக்காரன் வாசலில் நின்றானே" ன்னு ஆரம்புக்கும். நல்ல வேளை வாங்கறதுக்கு முன்னாடி பார்த்ததால அந்த புக்க அப்படியே கடாசிட்டு வந்துட்டேன். எல்லாம் நேரம்!

ஆங்கில புத்தகமெல்லாம் பார்க்கும்போது பொறாமையா இருக்கு, தமிழ்ல இவ்ளோ நல்லா இல்லையேன்னு. இருக்கற ஒண்ணு, ரெண்டும் இப்படி அறைவேக்காடாவா இருக்கணும்?

பி.கு.
நம்ம வீட்ல நடக்கறததான சொல்லியிருக்கு? உண்மைய சொன்னா உனக்கு பிடிக்காதென்னு ஆஷுவோட அப்பா சொன்னத இங்க யாராவது சொன்னா தெரியும் சேதி! உங்களுக்கு ஸ்பெஷலா பிச்சைக்காரன் புக் பார்சல் அனுப்பப்படும்!

5 Comments:

Anonymous Anonymous said...

Enakku Pichaikkaran book vendam. Adhanaal naan onnum sollalai...

4:04 PM, March 28, 2007  
Blogger காட்டாறு said...

வருத்தம் வேண்டாம் திறவுக்கோல். internet-ல இல்லாதது என்று ஒன்று உண்டோ . பெரியவங்களுக்குஅருமையான தமிழ் புத்தகங்கள், அகராதிகள், மற்றும் பலவும், குழந்தைகளுக்கு மழலைக் கல்வி என்ற அட்டகாச பகுதியும் தமிழ் வர்சுவல் யுனிவர்சிட்டியில் (http://www.tamilvu.org) இருக்கிறது. நான் என் மருமக்களுக்கு (தோழன்/தோழியர் குழந்தைகளுக்கு) தமிழ் கதைகள் இங்கிருந்து தான் திருடுவேன். :)

3:06 AM, March 29, 2007  
Blogger Manchus said...

Wow!! Can't imagine books being written this way.

"Amma Kayil Appa Bommai"...I am sure some maniac would have written this.

How did you start teaching her Tamil alphabets? I would like to teach R someday.

9:49 PM, April 11, 2007  
Anonymous Anonymous said...

ஆங்கில புத்தகமெல்லாம் பார்க்கும்போது பொறாமையா இருக்கு, தமிழ்ல இவ்ளோ நல்லா இல்லையேன்னு.

அப்படி முடிவு பண்ணிடாதிங்க, முதல்ல இதப் படிங்க...
Sugar and spice and everything nice? Not so much...
பி.கு: திறவுகோல் காணாமல் போயிருச்சோன்னு பயந்திட்டு இருந்தேன். :)

7:45 PM, April 29, 2007  
Anonymous Anonymous said...

nessuno forza poker online milan uno desperados
bonus no deposit free cash - no required from извънредно възнаграждение you
no deposit poker bonus for new gambling players darmowe promocje dla każdego
bonus za darmoza darmo bez deponowania kasy ale z bonus pokerem. unikalny poker tekst albo tędy i owędy tuitaj
Poker Party, Titan, Pkr, Mansion, Full Tillt, and many more promotion of poker online.
Bonus for freeLista con i migliori bonus dei poker online - nessuno deposito
Poker Party, Titan, Pkr, Mansion, Full Tillt, and many more promotion of poker online.
bonusy darmowebezproblemowo rejestracja platforma bełkot tutaj, czyli poker , aj co ja pisze
Best gambling bonus free chips Mansion, play game Full Tillt, and many more
извънредно възнаграждение

8:53 PM, May 30, 2009  

Post a Comment

<< Home

Sunday, January 14, 2007

பொங்கலோ பொங்கல்.


1 Comments:

Anonymous Anonymous said...

Hi there, just became alert to your blog through Google, and found that it's really informative. I'm going to watch out for brussels.
I will appreciate if you continue this in
future. Numerous people will be benefited from your writing.
Cheers!
debt consolidation reviews

4:39 AM, April 18, 2013  

Post a Comment

<< Home

Thursday, January 11, 2007

மழலை.

தமிழ்ல ப்ளாக் எழுத ஆரம்பிச்சது சில விஷயங்களுக்கு உதவுது. ரொம்ப நாளா ஆஷு பேசறதெல்லாம் பத்தி ஒரு பதிவு போடணும்னு நினைச்சிட்ருந்தேன். ஆனால் முழுக்க முழுக்க தமிழ்ல பேசறத எப்படி ஆங்கிலத்துல எழுதறதுன்னு யோசனை. தமிழ்ல எழுதலாம்னா அதுக்கு வணங்க மாட்டேங்குது. அதுக்கு ஒரே காரணம் - பேச்சு வழக்கும், எழுத்து வழக்கும் ஒரே மாதிரி இல்லாதது தான். பேச்சு வழக்கு மாதிரியே எழுதலாம்னு பாத்தா, என்னவோ தமிழ கொலை பண்ற மாதிரி இருக்கு. சுத்த தமிழ்ல எழுதினா டிவில "செய்திகள் வாசிப்பது" ன்னு அலற்ற மாதிரி இருக்கு. எதோ ரெண்டுங்கெட்டானா எழுதி வைக்கறேன்!

ஆஷு முதல்ல சொன்ன வார்த்தை - தாத்தா, ஆறு மாசத்துல. எங்கம்மா உடனே கோட்டை கட்ட ஆரம்பிச்சுட்டாங்க. எப்படி ஆஷு தன்னோட முதல் பிறந்த நாளுக்கு நன்றியுரை வாசிச்சு எல்லாரையும் அசத்த போறான்னு. ஆனால் குழந்தை அவசரப்படாம நிதானமா பாட்டின்னு சொல்றதுக்கு இன்னும் ஒரு வருஷம் ஆச்சு. தாத்தாக்கு அப்புறம் காக்கா, மாமா, பாப்பா, நாநா, டாடா.. ன்னு கொஞ்ச நாள் போச்சு. "மாமா" மா ஆகி, "மா" மெதுவா அம்மா ஆனது அவளுக்கு கிட்டதட்ட ஒரு வயசு இருக்கும் போதுதான். அவ அப்பாவையும் அம்மானே கூப்டுட்டு இருந்தா. அது பொறுக்கலை அந்த மனுஷருக்கு! அம்மானு கூப்ட குடுத்து வெச்சுருக்க வேண்டாம்? படாத பாடு பட்டார் அப்பான்னு சொல்ல வைக்க. அது என் பொண்ணாச்சே! அசையலை! "அது எப்படி பாப்பா சொல்றா, அம்மா சொல்றா ஆனா அப்பா வர மாட்டேங்குது? நீதான் நான் ஆஃபீஸ் போயிருக்கும் போது ஏதோ சொல்லி அவள மிரட்டி வச்சுருக்கன்னு" என் மேல வேற complaint. ஒரு வழியா அப்பாவும் வந்தது கிட்டதட்ட ஒன்றரை வயசுல. உடனே அவர் கிளம்பி வெளிநாடு போக வேண்டி இருந்தது. அதனால கடந்த மூணு மாசமா ஃபோன்ல தான் அப்பா! ஒரு வயசுல அவளோட பேரையும் சொல்ல ஆரம்பிச்சா. பொறந்ததுலேந்து கேட்டுக்கிட்டு இருக்காளே, அதனால இதுவே லேட்.

பதினெட்டு மாசத்துல "பாட்டி" சொல்ல ஆரம்பிச்சா. இப்ப எங்கம்மா கூட இருக்கற்துனால ஒரு நாளைக்கு நூறு பாட்டி சொல்றா. ரெண்டு வாட்டி பாட்டுனு கூப்டுட்டு, அப்புறம் பேர் சொல்லி கூப்பிடறா. என்னையும் அப்பப்ப பேர் சொல்லி கூப்பிடறா. "இதெல்லாம் உன் பாட்டியோட வச்சுக்கோ. என்னை பேர் சொல்லி கூப்ட நூறு பேர் இருக்காங்க. அம்மானு சொல்ல நீ ஒரு ஆளுதான். அதனால ஒழுங்கு மரியாதயா அம்மானு கூப்டு" ன்னு மிரட்டி வச்சுருக்கேன்! ஆனாலும் குழந்தை பேர் சொல்லி கூப்டாலும் நல்லாதான் இருக்கு! :) இப்போ, இருபது மாசத்துல, நான் சொல்றதெல்லாம் திரும்ப சொல்றா. நிறைய பேசறா. ஆனா வேத்து மனுஷங்கள கண்டா வெட்கம். வாய திறக்கற்து இல்லை. எங்கேந்து தான் குழந்தைகளுக்கு இந்த வெட்கம் வருமோ தெரியலை. எதோ ரெண்டு பேருக்கு முன்னால நம்ம குழந்தைய பேச சொல்லி பீத்திக்கலாம்னா முடியலை! இதுக்கா கஷ்டப்பட்டு பெத்தேன்?

8 Comments:

Anonymous Anonymous said...

Ha Ha Ha!

5:45 PM, January 11, 2007  
Blogger Kowsalya Subramanian said...

தமிழ்ல எழுதறது பத்தி நீங்க சொன்னது ரொம்ப சரி "பூ". ஆனாலும் நீங்க ரெண்டுங்கெட்டானா எழுதினது கூட கலக்கலா தான் இருக்கு :)

12:39 PM, January 17, 2007  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

Boo - உங்க ஆஷு மாதிரியே இங்க ஒரு பையன் இருக்கான் - வெளியாளுங்கள கண்டா வெட்கம். பையன் அது சொல்வான் இது சொல்வான் என்று அவங்கம்மா எங்ககிட்டே சொல்லிட்டு அவனை சொல்லிக் காமிக்க சொன்னா அவன் 'வாயத் திறப்பேனா பார்'னு உக்காந்திருப்பான். அம்மாவும் எவ்வளோ நாளா முயற்சிக்கிறாங்க.. ஒன்னும் நடக்கல. எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பா இருக்கும்!! :O)

6:30 AM, January 19, 2007  
Blogger B o o said...

S - அதயே தமிழ்ல எழுதற்து! :)

கௌசல்யா - நன்றி.

ஷ்ரேயா - அய்யோ பாவம் அந்த அம்மா. இதனால தான் நான் அப்படியெல்லாம் சொல்லிக்கறதே இல்லை! ஆனாலும் இந்த பெருசுங்க எல்லாம் விடறதில்லை. "பேசுவாளா? உன் பேரு என்ன?" ன்னு ஆஷுக்கிட்ட கேட்க, அது பேந்த பேந்த முழிக்க, "என் அக்காவோட பொண்ணு வயத்து பேத்தி ஒன்றரை வயசுல அந்த பேச்சு பேசும்" ன்னு அவங்க கம்பேர் பண்ண, நான் கடி ஆக, அதயேன் கேக்கறீங்க!!

6:47 PM, January 19, 2007  
Anonymous Anonymous said...

you have a nice blog. I just came across this today. but I didn't find any new posts...nice blog. tamizh-la blog padikka nalla thaan irukku :) Neengal mudindhaal " jayashree" in blog-i parungal..may be you will like it. http://mykitchenpitch.wordpress.com
though a recipe blog..it has a lot of other stuffs too.

4:04 PM, October 16, 2007  
Blogger Unknown said...

==//படாத பாடு பட்டார் அப்பான்னு சொல்ல வைக்க. அது என் பொண்ணாச்சே! அசையலை! "அது எப்படி பாப்பா சொல்றா, அம்மா சொல்றா ஆனா அப்பா வர மாட்டேங்குது?==/////////

ஆனா எங்க பொண்ணு வானதி "ப்பா ப்பா ப்பா" "அப்பா" தவிர வேற சொல்றதே இல்லை

6:38 PM, August 05, 2008  
Blogger Unknown said...

==//படாத பாடு பட்டார் அப்பான்னு சொல்ல வைக்க. அது என் பொண்ணாச்சே! அசையலை! "அது எப்படி பாப்பா சொல்றா, அம்மா சொல்றா ஆனா அப்பா வர மாட்டேங்குது?==/////////

ஆனா எங்க பொண்ணு வானதி "ப்பா ப்பா ப்பா" "அப்பா" தவிர வேற சொல்றதே இல்லை

6:40 PM, August 05, 2008  
Blogger anubharat said...

உங்க ப்ளாக் ரொம்ப நல்ல இருக்கு. த்வின்மோம் ப்ளாக் ல உங்க லிங்க் பார்த்து படிக்க ஆரம்பிச்சேன், அப்பறம் நிறுத்தவே இல்ல . எனக்கும் இந்த மாதிரி எல்லாம் எழுதனம்னு ஆசை வர அளவுக்கு எழுதிருக்கீங்க பூ . Kudos

12:34 AM, March 06, 2010  

Post a Comment

<< Home

Monday, January 01, 2007

உருகுதே மறுகுதே...

உருகுதே மறுகுதே, ஓரே பார்வையாலே
ஒலகமே சொழலுதே உன்ன பார்த்ததாலே

தங்கம் உருகுதா, அங்கம் கரையுதா,
வெட்கம் உடையுதா, முத்தம் தொடருதா
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்சம் நாளா

உருகுதே மறுகுதே, ஓரே பார்வையாலே
ஒலகமே சொழலுதே உன்ன பார்த்ததாலே


தங்கம் உருகுதே, அங்கம் கரையுதே,
வெட்கம் உடையுதே, முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா

உருகுதே மறுகுதே, ஓரே பார்வையாலே
ஒலகமே சொழலுதே உன்ன பார்த்ததாலே


அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக் கதை பேசி பேசி விடியுது இரவு
ஏழு கடல் தாண்டி தான் ஏழு மலை தாண்டி தான்
என் கருத்த மச்சான் கிட்ட ஒடி வரும் மனசு

நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டி பாக்குறேன்
காட்சியாவும் நெசமா மாற கூட்டி போகுறேன்
ஓ சாமி பாத்து கும்பிடும் போதும் நீதான நெஞ்சில் இருக்கே..

உருகுதே மறுகுதே, ஓரே பார்வையாலே
ஒலகமே சொழலுதே உன்ன பார்த்ததாலே


ஊர விட்டு எங்கயோ வேரருந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலதான வாழுறேன்

கூர பட்டு சேல தான் வாங்க சொல்லி கேக்குறேன்
கூடு விட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன்
கடவுள் கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா?
உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதி கொடுக்கவா?
ஓ மையிட்ட கண்ணே உன்ன மறந்தா இறந்தே போவேன்

(உருகுதே மறுகுதே..)

சங்கர் மகாதேவனுக்கு ஒரு தேன் bottle வாங்கி அனுப்பலாமான்னு பார்க்கறேன். மனுஷன் கலக்கி இருக்கார்! என்ன குரல்! Just Wow! பாட்டுக்கு ஒரே திருஷ்டி - ஷ்ரேயா கோஷல் முதல் வரில "ஒலகமே" க்கு பதிலா "ஒழகமே"ன்னு பாடறாங்க! ழ வராம ள சொல்லுவாங்க கேட்ருக்கேன். இது என்னவோ புதுசா இருக்கு. ஆனா அடுத்தடுத்து வர்ற வரிகள சரியா உச்சரிச்சு இருக்காங்க. Strange! எப்படியோ, எனக்கு ரிபீட் மோட்ல போட்டு கேக்க ஒரு பாட்டு கிடைச்சாச்சு! சந்தோஷம்! :)

6 Comments:

Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

இப்பிடித்தான் இளையராஜா இசைநிகழ்ச்சிலே 'காற்றில் எந்தன் கீதம்' பாடும்போது கூட 'காணாமல் உன்னைத் தோடுதே'ன்னு பாடினாங்க. கடைசி இடத்திலே திருத்திகிட்டாங்க. but, what a voice.

மு.பி.கு(முக்கிய பின் குறிப்பு):
1. (இல்லே..உங்களுக்கு சந்தேகம் வந்தாலுமே..ன்ன்னு சொல்லிவைக்கலாமேன்னுதான்! :O) படம் நடிச்ச ஷ்ரேயா வேற நான் வேற. அவங்க 'மழை' நடிக்க ரொம்ப முன்னாலேயே நான் என் பதிவை ஆரம்பிச்சு இந்தப் பேரையும் வைச்சாச்சு.

1:09 PM, January 05, 2007  
Blogger B o o said...

வருகைக்கு நன்றி ஷ்ரெயா! ரொம்ப பாபுலரான பேரு இப்பொதைக்கு ஷ்ரேயா தான்! :) You are right about Shreya Goshals voice. Awesome. But this song is Shankar's!

6:59 PM, January 06, 2007  
Blogger Premalatha said...

என்னா படம்? Raagaல இருக்கா? எனக்கும் சங்கர் மகாதேவன் குரல் பிடிக்கும்.

2:19 PM, January 23, 2007  
Blogger B o o said...

Latha,
Its from the movie Veiyil. Chk it out in musicindia. Dont know about Raaga.
http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.8626/

5:12 PM, January 23, 2007  
Blogger B o o said...

http://www.musicindiaonline.com/mus
ic/tamil/s/movie_name.8626/

5:13 PM, January 23, 2007  
Blogger Unknown said...

ஆனா எங்க பொண்ணு வானதி "ப்பா ப்பா ப்பா" "அப்பா" தவிர வேற சொல்றதே இல்லை

6:43 PM, August 05, 2008  

Post a Comment

<< Home

Thursday, December 28, 2006

சுய தம்பட்டம்.

கில்லி க்கு ஒரு ஸ்பெஷல் சலாம்!

பி.கு.
இந்த மாதிரி பெரிய ஆளுங்க எல்லாம் எழுத போறாங்கன்னு தெரிஞ்சிருந்தா, நான் எழுத ஒத்துக்கிட்டே இருக்க மாட்டேன். கவுத்துட்டீங்களே, பிரகாஷ்!

9 Comments:

Anonymous Anonymous said...

Everything is very open with a precise explanation of the challenges.

It was definitely informative. Your website is extremely helpful.
Many thanks for sharing!

Feel free to surf to my page ... wordpress kurs
My web page > wordpress tutorials

8:19 AM, February 22, 2013  
Anonymous Anonymous said...

What's up, this weekend is pleasant for me, since this occasion i am reading this great educational piece of writing here at my residence.

Also visit my web-site Steinzeit Diät

6:27 PM, February 23, 2013  
Anonymous Anonymous said...

Exceptional post however I was wanting to know if you could
write a litte more on this topic? I'd be very grateful if you could elaborate a little bit further. Kudos!

my web site - Wie kann man sich die leckere und ausgesprochen einfache Diät ohne Gluten vorstellen

2:04 PM, February 24, 2013  
Anonymous Anonymous said...

Hi, this weekend is good designed for me, since
this time i am reading this wonderful informative article here at my house.


Here is my web site ... abnehmen

10:53 PM, March 01, 2013  
Anonymous Anonymous said...

Good day! Do you know if they make any plugins to help
with Search Engine Optimization? I'm trying to get my blog to rank for some targeted keywords but I'm
not seeing very good success. If you know of any please share.
Kudos!

my site wordpress update anleitung

11:19 PM, March 01, 2013  
Anonymous Anonymous said...

Heya i am for the first time here. I found this board and I
find It really useful & it helped me out a lot.
I hope to give something back and help others like you helped
me.

Visit my site low carb diet plan

4:12 PM, March 02, 2013  
Anonymous Anonymous said...

I'm not sure exactly why but this site is loading incredibly slow for me. Is anyone else having this issue or is it a problem on my end? I'll check back later on and see if the problem still exists.


my weblog - thai massagepraxis wiesbaden
my webpage > Fuss-Reflex-Massage

8:45 PM, March 03, 2013  
Anonymous Anonymous said...

Greate article. Keep writing such kind of
info on your page. Im really impressed by your site.

Hey there, You've done a fantastic job. I will definitely digg it and in my view suggest to my friends. I'm sure they
will be benefited from this web site.

Feel free to visit my web page steinzeit ernährung
My web site: quick weight loss

11:18 AM, March 08, 2013  
Anonymous Anonymous said...

What i do not understood is if truth be told how you are not really
a lot more well-appreciated than you might be now. You are so intelligent.
You realize thus significantly with regards to this subject,
made me personally believe it from a lot of numerous
angles. Its like men and women don't seem to be interested until it's one thing to
accomplish with Woman gaga! Your personal stuffs nice.
All the time maintain it up!

Also visit my web blog paleo ernährung

3:20 PM, March 11, 2013  

Post a Comment

<< Home

Saturday, October 28, 2006

வாண்டுக்காக...

சுக்கான் குத்தறதும், சோறு கொதிக்கறதும்
பிள்ள அழறதும், பேசாதே என்கிறதும்
வா வா என்கிறதும், மாட்டேன் போ என்கிறதும்
சண்டை போடறதும், மண்டை உடையறதும்!

இது எங்க பாட்டி ஆஷுக்கு அடிக்கடி பாடற பாட்டு. இதுக்கு நல்லா action பண்ணிக்கிட்டே பாடலாம். பாடல் அறைகுறையா இருக்குன்னு நினனக்கறேன். முழுவதும் தெரிஞ்சவங்க சொல்லுங்க.

குண்டு பையன் சுண்டுவாம்
சுவரின் மேலே உட்கார்ந்தான்.
சுண்டு கீழே விழுந்தானே
துண்டு துண்டாய் ஆனானே.
ஒண்ணா சேர்க்க முடியலையாம்.
ராஜா வந்தும் முடியலையாம்.
ராணுவம் வந்தும் முடியலையாம்!

இது நான் ஒரு தமிழ் ரைம்ஸ் புத்தகத்துல படிச்சேன். ஆஷுவோட current favorite. யாரோ ஹம்ட்டி டம்ப்டிய தமிழ்ல மொழி மாற்றம் செஞ்சுருக்காங்க. நல்லா தான் இருக்கு!

குட்டி எலி அன்றொரு நாள்
குதிச்சு குதிச்சு ஓடிச்சாம்!

யானை, புலி, சிங்கம் காண
ஆசை கொண்டு ஓடிச்சாம்!

உயரமான மரத்தில் ஏறி
உலகமெல்லாம் பார்த்ததாம்!

தூரத்திலே சிங்கம் ஒன்று
தூங்குவதைப் பார்த்ததாம்!

மலமல என்று இறங்கி
அது மகிழ்ச்சியுடன் ஓடிச்சாம்!

மேலும் கீழும் பார்த்து
அதன் மீசையை பிடித்து இழுத்ததாம்!

வலய வலய வந்து
அதன் வாலைப் பிடித்து இழுத்ததாம்!

கோபம் கொண்டு எழுந்த சிங்கம்
குட்டி எலியைப் பிடித்ததாம்!

கையில் பிடித்த எலியை அது
கடித்து தின்ன பார்த்ததாம்!

கை கூப்பி குட்டி எலியும்
கருணை கருணை என்றதாம்!

மண்டியிட்டு குட்டி எலியும்
மன்னிப்பு என்றதாம்!

பெரிய மனசு பண்ணி சிங்கம்
பிழைத்துப்போ என்றதாம்!

விடுவிடு என்று நடந்த சிங்கம்
வேடன் வலையில் விழுந்ததாம்!

அது கர்ஜித்து அழுத ஓசை
காடு முழுதும் கேட்டதாம்!

எங்கோ கேட்ட குரல் என்று
குட்டி எலியும் வந்ததாம்!

சிங்கம் சிக்கியிருந்த வலையை அது
சின்னாபின்னமாய் கடித்ததாம்!

வெளியில் வந்த சிங்கம் எலியிடம்
நன்றி நன்றி என்றதாம்!

செய்த நன்றி மறவேன் என்று
சின்ன எலியும் சொன்னதாம்!

இது எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்! ஆஷுக்கு முழுதும் கேக்க இன்னும் பொறுமை வரவில்லை! எனக்கும் சரியா மனப்பாடம் ஆக மாட்டேங்குது!

அம்மா இங்கே வா வா, அணிலே அணிலே ஓடி வா, யானை யானை, ... இந்த பாடல்களும் ஆஷுக்கு ரொம்ப பிடிக்கும். மேலே இருக்கும் மூன்றும் அவ்வளவா கேட்டிருக்க மாட்டோம்ன்னு அத மட்டும் எழுதினேன்.(டைப் அடிக்க பொறுமையும் இல்லை!)

மேலும் சில பாடல்களுடன் இதே நேரம், இதே நாள் வேறொரு சமயத்தில் சந்திப்போம். உங்களுக்கு தெரிஞ்ச பாடல்கள் பற்றியும் எழுதவும்.


ps. ரொம்ப நாளா பதிவு ஏதாவது போடணும்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா பிடிச்ச மாதிரி ஒண்ணுமே தோணல. அப்புறம் பிரபு ரொம்ப(!!) கேட்டுக்கிட்டதால தமிழ் ரைம்ஸ் பத்தி எழுதலாம்ன்னு தோணிச்சு. ரொம்ப நன்றி பிரபு ஊக்கம் அளித்ததுக்காக. :)

4 Comments:

Anonymous Anonymous said...

Can you find out the old stories, Peru marandhu pona E(housefly), vaal arundhu pona kurango story, paatti paatti kozhukkattaikku mooku undodi and post them as well..

1:32 AM, October 30, 2006  
Anonymous Anonymous said...

Thank you thank you :D That new humpty dumpty song is really good!

By the way sukkan na enna? I have heard this rhyme a lot, but meaning maRandhu poachu

5:36 AM, October 30, 2006  
Anonymous Anonymous said...

bonus no deposit free cash -
no deposit bonus poker Good day and luck on table :)

4:01 PM, May 23, 2009  
Anonymous generic propecia said...

Hello people want to express my satisfaction with this blog very creative and I really like the views of the focus very good indeed Thank you for the helpful information. I hope you keep up the good work on making your blog a success!

10:19 PM, April 22, 2010  

Post a Comment

<< Home

free invisible hit counter